Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்

பொங்கல் பண்டிகையின் வரலாறு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கணிக்கப்படுகிறது. இது பண்டைய தமிழர்களின் விவசாய சமூகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. பொங்கல் பண்டிகை விவசாயத்தின் வளர்ச்சிக்கும், சூரியனின் போற்றுதலுக்கும் (Pongal Festival 2025) அடிப்படையாக இருப்பதால் தமிழ் மக்களின் சமூக பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுகிறது.  

பொங்கல் பண்டிகை தமிழ் மக்களின் வாழ்க்கையில் விவசாயம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளின் உழைப்பின் முக்கியத்துவத்தையும், உணவு உற்பத்தியில் இயற்கையின் பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் விழாவாக போகி பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் வரலாறு (Pongal Festival 2025)

போகி பொங்கல்

போகி பண்டிகையானது பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள். மேலும் இந்த தினத்தில் பழைய பொருட்களோடு நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் சேர்த்து (Pongal Festival 2025) எரிக்க வேண்டும் என்பதே போகி பண்டிகையின் சிறப்பாகும். இதையேதான் நன்னூல் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என போகி பொங்கலை குறிப்பிடுகிறது.

தைப்பொங்கல்

சங்ககாலத்தில் அறுவடை சமயத்தில் மழை பெய்யவும், நாட்டின் வளம் நன்றாக செழிக்கவும் பெண்கள் 48 நாட்கள் விரதத்தை (நோன்பு) கடைப்பிடித்து தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். மழையின் உதவியால் உழவர்கள் ஆடி மாதத்தில் விதைத்ததை தை முதல் நாளில் தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கலாகும். தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் (Pongal Festival 2025) நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ் மக்கள் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டு வருகின்றனர். 

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கலை தையித் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகையும், தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ என்று கலித்தொகையும், தைத் திங்கள் தங்கயம் போல் என்று புறநானுறும், தையித் திங்கள் தங்கயம் படியும் என்று நற்றிணையும், தையித் திங்கள் தங்கயம் போல என்று ஐங்குறுநூறும், தொல்காப்பியமும் தைப்பொங்கலின் சிறப்பினை குறிப்பிடுகிறது.

மாட்டு பொங்கல்

சங்க இலக்கியங்களில் ‘மாடு’ என்ற சொல் காளை மாட்டைக் குறிக்கிறது. இதன்காரணமாக மாட்டுப் பொங்கல் விழாவானது (Pongal Festival 2025) கால்நடைகளுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது. ஏனெனில் விவசாயத்தில் கால்நடைகள் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றன. மாட்டு பொங்கல் தினத்தன்று மக்கள் இனம், சாதி, மதம் போன்ற வேற்றுமைகளை மறந்து அறுவடைக்கு நன்றி கூறியும், புதிய ஆண்டை வரவேற்றும் கொண்டாடி வருகின்றனர். மாட்டு பொங்கல் விழாவானது தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்

பண்டைய தமிழகத்தில் காணும் பொங்கல் ‘கன்னி பொங்கல்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. வயதாகியும் திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்கள் கொண்டாடும் பொங்கல் தான் (Pongal Festival 2025) கன்னி பொங்கல்.  திருமணம் ஆகாத பெண்களும், ஆண்களும் ஒன்றுகூடி காணும் பொங்கல் தினத்தன்று பொங்கல் வைத்து வழிபட்டால் விரைவில் திருமணம் ஆகும் என்பது மக்களின் ஐதீகம். ஆனால் நாகரீகம் வளர வளர இந்த பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. இப்போது காணும் பொங்கல் என்றால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply