Ponnankanni Keerai Benefits In Tamil : பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாரம் ஒருமுறையாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சிலர் இதை பின்பற்றுகிறார்கள். இதை பலர் பின்பற்றுவதில்லை. நம் உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நாம் அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கிறது. ஆனால் நாம் சரிவிகித உணவை உண்பது மிகவும் அவசியம். குழந்தைகள், பருவமடைந்த பெண்கள், ஆண்கள், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் சரிவிகித உணவு என்பது அவசியம் தேவை. பொன்னாங்கண்ணி கீரை, கீரை வகைகளில் சிறந்ததாக அறியப்படுகிறது. இது சருமத்திற்கு தங்கமான நிறத்தை கொடுக்கிறது. இந்நிலையில் இவற்றின் மருத்துவ பயன்களை (Ponnankanni Keerai Benefits In Tamil) தற்போது காணலாம்.

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள் (Ponnankanni Keerai Benefits In Tamil)

கண் கோளாறுகள்

பொன்னாங்கண்ணி கீரையை கண் இமைகளில் தடவி கண் இமைகளின் செபாசியஸ் சுரப்பிகளின் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது கண்களின் நாள்பட்ட அழற்சி மற்றும் வெண்படல அழற்சியைக் குணப்படுத்துகிறது. இதை இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் இமை வீக்கம் (Ponnankanni Keerai Benefits In Tamil) குணமாகும். மேலும் பார்வை இழப்பு போன்ற கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. மாலை கண் நோய் பிரச்சனை இருந்தால் பொன்னாங்கண்ணி கீரையை வறுத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். 

மூல நோய்

பொன்னாங்கண்ணி சாறு மற்றும் அதில் சம அளவு கேரட் கலந்து, அதில் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய்க்கு தீர்வாக இருக்கும். பொன்னாங்கண்ணி (Ponnankanni Keerai Benefits In Tamil) கீரையுடன் மிளகு, பூண்டு கலந்து சாப்பிட்டால் மூல நோய்க்கு நிவாரணம் கிடைக்கும். மூல நோயுடன் இரத்தப்போக்கு இருந்தால் பொன்னாங்கண்ணிச் சாறு, முள்ளங்கிச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து தினமும் இரண்டு டீஸ்பூன் சாப்பிட்டு வர மூல நோயினால் ஏற்படும் ரத்தக் கசிவு குணமாகும்.

விஷக்கடி குணமாக

பொன்னாங்கண்ணி இலையை பொடியாக்கி, பூச்சிகள் கடித்த இடத்தில் வெளிப்புறமாகப் பூசினால் விஷக்கடி நீங்கும். பூச்சி கடிக்கு முதலுதவி நடவடிக்கைகளுடன் இணைந்து இதைப் பயன்படுத்தலாம்.

ஆஸ்துமா

பொன்னாங்கண்ணி சாறுடன் ஒன்று அல்லது இரண்டு பூண்டுப்பற்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், தொடர் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகும்.

தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த

பாலூட்டும் தாய்மார்கள் பொன்னாங்கண்ணி கீரையை (Ponnankanni Keerai Benefits In Tamil) சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு தாய்ப்பாலை மேம்படுத்துகிறது.

Latest Slideshows

Leave a Reply