Ponniyin Selvan-2 Audio Launch: வந்தியதேவனை புகழ்ந்து பேசிய அமைச்சர்

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் இசை வெளியீட்டு(Ponniyin Selvan-2 Audio Launch) விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன், எனது தொகுதிக்கு உட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர் என்று புகழ்ந்து பேசினார்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்க்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே இதில் நடித்தனர்.

இந்த படத்தின் இரணடாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடலான “அக நாக” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் காத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சரித்திரத்தில் நிற்கும் அளவில் சரித்திர கதையை படமாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நான் படிக்கும் காலத்தில் பலமுறை படித்திருக்கிறேன். இந்தக் கதையை படமாக்குவதாகச் சுபாஷ்கரன் தான் படமாக்குவதாகச் சொன்னார். அப்போது இயக்குனர் யார் என்று கேட்டேன்.

அவர் அதற்கு மணிரத்தினம் என்று கூறினார். மணிரத்தினம் இந்த கதைக்கு ஒத்துவரமாட்டார் என்றேன் ஏனென்றால் அவர் இருட்டில் படம் எடுப்பவர் என்று வேண்டாம் என்றேன் என்று கூறினார். ஆனால் படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வீட்டில் இருந்து வணக்கம் செலுத்தினேன். கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். வந்தியத்தேவனின் ஊர் எனது தொகுதிக்குட்பட்ட ஊர் தான் அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என்று பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்று இல்லை எப்போதும் இல்லை. நான் சொல்வதைக் கேட்காமல் படத்தை எடுத்து வெற்றிபெறச் செய்த சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு தமிழ் மன்னனை ஒரு படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய பெருமை சுபாஷ்கரனுக்கு சேரும் என்றார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெரும் என்று கூறினார்.

Ponniyin Selvan-2 Trailer

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் பிரமாண்டமாக அமைந்துள்ளது இரண்டாம் பாகத்தின் கதை மிகவும் பரபரப்புடன் இருக்கும். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் சோழ தேசத்தில் நடக்கும் அரசியல், நந்தினி பழிவாங்குதல், தங்கள் நாட்டைக் காப்பாற்ற அருண்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், குந்தவை ஆகியோர் போராடுவது என இரண்டாம் பக்கம் தொடரும்.

3 நிமிடம் 34 வினாடிகள் ஓடிய இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் முதல் பாகம் நிறைவடைந்ததில் இருந்து தொடர்கிறது. இதில் ஒவ்வொருவருக்குமே முக்கியமான காட்சிகள் இரண்டாம் பாகத்தில் அமைந்துள்ளது. அனைவரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர்.ஏ.ஆர் ரகுமானின் இசை மற்றும் ரவிவர்மனின் ஒளிப்பதிவு முதல் பாகத்தை விட இரண்டாம் பக்கம் மிரட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ட்ரைலரை பார்த்ததிலிருந்து ரசிகர்கள் படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply