Ponniyin Selvan 2 Audio Launch: ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா
ஐந்து பாகங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். முதல் பாகம் உலக அளவில் கடந்த வருடம் செப்டம்பர் 20 தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிசில் ரூ .400 கோடிகளுக்கு மேல் அதிகமாக வசூல் செய்தது. இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்ப்புக்கு மத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28 தேதி திரைக்கு வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அக நக பாடல் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. இது வந்தியத் தேவன் மற்றும் குந்தவைக்கு இடையான பாடலாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய நடிகை சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய காதல் காட்சிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை இடையேயான காதல் காட்சி தான் ஃபேவரைட் எனவும் இரண்டாம் பாகத்தில் அந்த காட்சி பெரும் வரவேற்பு பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
Ponniyin Selvan 2 Audio Launch:
பொன்னியின் செல்வன்- 2 படத்தின் டிரெய்லர் (Ponniyin Selvan 2 Trailer) மற்றும் பிற பாடல்கள் (Ponniyin Selvan 2 Audio Launch) வருகிற 29 ஆம் தேதி வெளியாகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தற்போது அறிவிப்பு வந்துள்ளது.
இதன் தொடர்பாக இந்த படத்தின் பாடல்களுக்கு ரஹ்மான் இசை அமைத்த வீடியோவை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். படத்தின் புரமோஷனுக்கு பெரிதும் உதவியது. தற்போது இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
இருப்பினும் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.பொன்னியின் செல்வனின் படத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்க திட்டமிட்டபோது வந்தியத் தேவன் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.