Ponniyin Selvan 2 Movie Review: PS-2 வருகை எப்படி இருக்கிறது???
பொன்னியின் செல்வன் பாகம் 2 நேற்று திரையங்குகளில் வெளியானது. முதல் பாகம் வெளியாகியபோது பெரும் வரவேற்பைப்பெற்றது. நீண்ட நாட்களாக திரையரங்குகளுக்கு செல்லாத குடும்பங்கள் கூட மீண்டும் திரையரங்கிற்கு செல்லும் ஆர்வத்தினை இப்படம் தூண்டியது என்றும் சொல்லலாம். அதில் சில விமர்சனங்கள் இருந்தாலும். பெருவாரியாக எல்லாராலுமே இப்படம் கொண்டாடப்பட்டது. அப்படி ஒரு படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் எதிர்பார்புகளை இந்த படம் பூர்த்தி செய்கிறதா, முதல் பாகத்தில் இருந்த குறைகள் இரண்டாம் பாகம் நிவர்த்தி செய்திருக்கிறதா, படம் எப்படி இருக்கிறது இது போன்ற கேள்விகளுக்கான விடையை இப்படத்திற்கான விமர்சனத்தில் காண்போம்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்னும் நாவலை மையமாக கொண்டு இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் படத்தில் விக்கரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். விக்ரமின் கதாபாத்திரம் முதல் பாகத்திலே பெரிதாக பேசப்பட்டது. இந்த ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரம் இப்படத்திலும் தொடர்கிறது. சில மாற்றங்கள் முதல் பாகத்தில் பார்க்க முடிந்தது தேவையற்ற கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்த படவில்லை, நிறைய காட்சிகளும் விடுபட்டிருந்தது. அதே போன்று தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிலும் தேவையற்ற கதாபாத்திரங்கள் நீக்கப்பட்டுள்ளது. புது காட்சிகளும் சில இணைத்துள்ளனர். கதையின் மைய கருத்தில் எந்த மாற்றங்களும் இல்லை.
முதல் பாகத்தின் இறுதியில் பொன்னியின் செல்வன் இறந்து விடுகிறார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவுகிறது. இதனுடைய தொடர்ச்சியாக இந்த பாகத்தில் பொன்னியின் செல்வன் உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்து விடுகிறது. முக்கியமாக பாண்டிய ஆபத்துதவிகள் நந்தினியுடன் சேர்ந்து சபதம் எடுக்கிறார்கள். சோழர்களை வீழ்த்த தீர்க்கமான முடிவுகளை எடுக்கிறார்கள். மூன்று அரசர்களையும் ஒரே சமயத்தில் அழிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். அந்த திட்டத்தில் அவர்கள் வெல்கிறார்களா? இல்லையா? நந்தினி யார், அவருடைய யார்? அவருடைய நோக்கம் என்ன? அவருடைய பெற்றோர் யார்? நந்தினி எப்படி பாண்டியர்களுடன் சேர்ந்தார். ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கு என்ன சம்மந்தம் இப்படி நிறைய விஷயங்களுக்கு இந்த பாகம் விடை சொல்கிறது. இவற்றையும் கடந்து சோழர்கள் குலம் என்ன ஆயிற்று என்பதும் இப்படத்தின் மைய கதையாக இருக்கிறது.
சிறந்த கதாபாத்திரம்
PS 2 படத்தில் யாருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது என்றால் ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தினி இவர்களின் கதைதான் இந்த பாகத்தில் முக்கியமாக சொல்லக்கூடிய ஒரு பகுதியாக இருக்கிறது. படத்தின் தொடக்கத்திலே 15 நிமிடம் இசையுடன் இவர்களின் ஃப்ளாஷ்பேக் கதை காண்பிக்கப்பட்டுள்ளது. வசங்கள் குறைவாக இருக்கிறது. நதினியை எப்படி சந்திக்கிறார்.
சிறு வயதில் அவர்களின் பழக்கம் என்ன? அவர்கள் எப்படி பிரிந்தார்கள் என்று தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. நந்தினியின் பழிவாங்கும் எண்ணம் அவருடைய கண்களால் வெளிப்படுத்துவதும், அவருடைய திட்டம், அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை ஐஸ்வர்யா ராய் சிறப்பாகா நடித்துள்ளார். அதேபோன்று ஆதித்திய கரிகாலன் என்றால் விக்ரம்தான் நினைவிற்கு வருவார் அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். தனக்கான தனித்துவமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். முக்கியமாக கடம்பூர் கோட்டையின் வருகை தந்தது குதிரையில் அவர் அமர்நது பழுவேட்டரையார் மற்றும் நந்தினியுடன் பேசுவது மற்றும் அந்த குதிரையும் அதைக்கேற்றவாறு அங்கும் இங்கும் நிற்கமால் நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தின் கதை நாயகனகனான அருண்மொழி வர்மன் இந்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இதில் இவருக்கு மாஸ் கட்சிகள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்திலேயே முக்கிய காட்சிகள் கொடுக்கவில்லை என்றாலும் வந்தியத்தேவனை கதை நாயகனாக காட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அருண்மொழி வர்மனை முதன்மை கதாபாத்திரத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
அருண்மொழி வர்மன் அவர் தங்கியிருந்த புத்தபிட்சுக்கள் இருக்குற இடத்தில் இருந்து வெளியில் வந்தால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிஞ்சும் கூட அவர் வெளியில் வந்து திட்டம் திட்டுவது மற்றும் யானைகளை வைத்து வருவது போன்ற காட்சிகள் ஒரு கதாநாயகனுக்கு எப்படி இருக்குமோ அதுபோல காட்சிகள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. அருண்மொழி வர்மனாக அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இதில் வரும் சண்டை கட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் இந்த காட்சிகளில் ஜெயம் ரவி தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து நடித்துள்ளார். அடுத்ததாக கார்த்திக், த்ரிஷா, ஜெயராம் இவர்களின் கதாபாத்திரங்கள் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் குறைவாகவே உள்ளது.
இரண்டாம் பாகத்தில் ஒளிப்பதிவு அனைத்தும் சிறந்த முறையில் உள்ளது. இதில் வரும் கிராமங்கள், சந்தைகள், அரண்மனைகள், இயற்கை காட்சிகள் அனைத்தும் உண்மையாக காட்டப்பட்டுள்ளது போல் இருக்கிறது. இதில் வரும் காட்சிகள் அனைத்தும் கதையில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. கதையில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்து குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.