Ponniyin Selvan Recap Video: கமல்ஹாசன் குரலில் வெளியான புதிய வீடியோ
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில் கமல்ஹாசன் குரலில் வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்கி எழுதிய புகழ் பெற்ற ஒரு புதினம் பொன்னியின் செல்வன் புத்தகம் ஆகும். இதை தழுவி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், அரும்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நடித்துள்ளனர்.
படம் வெளியாக இன்னும் சிறிது காலங்கள் மட்டுமே உல்ல நிலையில் படக்குழுவினர் ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கடந்த சில நாட்களாக சோழர்களின் பயணம் என்ற பெயரில் சென்னை, கோவை என பல இடங்களுக்கு சென்று படம் பார்க்கும் ஆர்வத்தை மக்களிடேயே தூண்டி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது முதல் பாகத்தை விட 2 ஆம் பாகத்திற்கு நேரம் குறைவாக இருக்கும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளது. 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் குரலில் இரண்டாம் பாகத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் குரலில் கதாபாத்திரங்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனின் குரல் வெளியாகி உள்ள வீடியோ ரசிகர்களிடேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளது.