Ponnusamy Karthik Birthday Celebration : மக்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பொன்னுசாமி கார்த்திக்

Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் மக்களுடன் பிரம்மாண்டமாக தனது பிறந்தநாளை (Ponnusamy Karthik Birthday Celebration) கொண்டாடியுள்ளார்.

இளம் தொழிலதிபர் திரு.பொன்னுசாமி கார்த்திக் :

திரு.பொன்னுசாமி கார்த்திக் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்காவில் உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தில் திரு.அண்ணாதுரை மற்றும் திருமதி.கவிதா அவர்களுக்கு இளைய குமாரனாக பிறந்தார். இவர் வேட்டவலத்தில் பள்ளி படிப்பும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பையும் முடித்தார். பின்னர் பல நிறுவனங்களில் வேலை செய்த அவர், தனது கடுமையான முயற்சியினால் 2016 ஆம் ஆண்டு நம்ம பேமிலி பில்டர் & டெவலப்பர் என்ற நிறுவனத்தை நிறுவினார். தொடர்ந்து அவரது கடுமையான உழைப்பிற்கு பிறகு நிறுவனம் வளர்ச்சியடைந்து ‘பிரைவேட் லிமிடெட்’ ஆக மாறியது (நம்ம Family Builder & Developer Pvt Ltd). இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 5 பேர் கொண்ட சிறிய நிறுவனமாக தொடங்கி, இன்று இந்நிறுவனம் 150+ பணியாளர்களைக் கொண்ட Namma Family Group ஆக வளர்ந்துள்ளது. திரு.பொன்னுசாமி கார்த்திக் தமிழ்நாடு முழுவதும் வீட்டுமனை (Resale & Layout) விற்பனையான தனது வணிகத்தை (GST, ECR, OMR, கோயம்புத்தூர், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கேரளா) ஆகிய இடங்களில் பரப்பியுள்ளார். இது மட்டுமில்லாமல் (Tender Coconut Import & Export, Business Development) என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.

செயல் நாயகன் :

திரு.பொன்னுசாமி கார்த்திக் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து விளங்குகிறார். சமூக மக்களை ஊக்குவிக்கும் வகையில், வளரும் தலைமுறைக்கு தனது மதிப்புமிக்க பேச்சுகளால் நல்ல அறிவுரைகளையும், கருத்துக்களையும் கொடுத்து வருகிறார். இவரது குறிக்கோள் மற்றவர்கள் பின்பற்றுவதற்கான போக்குகளை அமைப்பதுதான். இவரை பொறுத்தவரை வெற்றி என்பது முடிவில்லா செய்யும் செயலாகும். இவரது வெற்றிப் பயணம் நேற்றும், இன்றும் மட்டுமில்லாமல் நாளையும் தொடரும். அந்த வகையில் “செயல்” என்ற Trust-யை உருவாக்கி மாணவர்களுக்கு கல்வித்தொகையும், ஏழை எளிய மக்களுக்கு இருக்க இருப்பிடமும், உண்ண உணவும் அளித்து வருகிறார். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம் ஆகியவற்றிக்கு பொருளுதவி செய்து வருகிறார்.

Ponnusamy Karthik Birthday Celebration :

இளம் தொழிலதிபரான திரு.பொன்னுசாமி கார்த்திக் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள பல பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு விருந்து வைத்து மக்களின் ஆசீர்வாதங்களை பெற்றார். மேலும் தனது பிறந்தநாளான கடந்த ஜூன் 13 ஆம் தேதி, தனது சொந்த ஊரான மலையரசன் குப்பத்தில் மக்களுடன் தனது பிறந்தநாளை திருவிழா (Ponnusamy Karthik Birthday Celebration) போல் கொண்டாடினார். அவரது பிறந்தநாளன்று 500 மேற்பட்ட அனாதை மற்றும் முதியோர் ஆகியோர் ஆசீர்வாதங்களையும் பெற்றார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் படிக்கும் பல மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான பொருட்களை வழங்கி, உணவு விருந்து வழங்கினார். மேலும் 4000 மேற்பட்டோருக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுடன் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தார்.

Latest Slideshows

Leave a Reply