Poolankilangu Health Benefits : பூலாங்கிழங்கு என்ற மூலிகைக்கிழங்கின் மகிமைகள்

Poolankilangu Health Benefits : வெள்ளை மஞ்சள் நிறத்துடன் காணப்படும் இந்த பூலாங்கிழங்கு ஆனது கிச்சிலி கிழங்கு, வெள்ளை மஞ்சள் கிழங்கு மற்றும் அம்பா மஞ்சள் என்று பல்வேறு பெயர்களை கொண்டுள்ளது. இந்த பூலாங்கிழங்கு கசப்பு சுவையுடன் மாம்பழ வாசனையும் கலந்து பார்ப்பதற்கு இஞ்சி போலவே இருக்கும். வாசனைக்கு மட்டுமே பூலாங்கிழங்கு பயன்படுவதாக மக்கள் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த கிழங்கின் மருத்துவ பயன்கள் அபரிமிதமானது ஆகும்.

Poolankilangu Health Benefits - பூலாங்கிழங்கு பெருமளவு மருத்துவ நன்மைகளை தருகிறது :

Poolankilangu Health Benefits : இந்த பூலாங்கிழங்கில் ஏகப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடங்கியிருக்கின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெண்களுக்கு பெருமளவு நன்மைகளை வாரி தருகிறது. குறிப்பாக இது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்கிறது. அதனால் பெண்கள் இந்த கிழங்கில் டீ, சூப் போன்றவை தயாரித்து குடிக்கலாம். இந்த கிழங்கானது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த பூலாங்கிழங்கில் உள்ள குர்குமின் என்ற பொருள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுவதுடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. இப்போதுவரை புற்றுநோய் சிகிச்சையில் இந்த பூலாங்கிழங்கின் பயன்பாடு மிகவும் அபரிமிதமாக அதிலும், பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை நெருங்க விடாமல், இந்த பூலாங்கிழங்கின் சாறு ஆனது மருந்தாக திகழ்கிறது.

இந்த பூலாங்கிழங்கு ஆனது சுவாச மண்டலத்துக்கும் மற்றும் நுரையீரலுக்கும் நன்மை தந்து, ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற மருத்துவ பிரச்சனைகளை போக்கக்கூடியது. இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள், வாய்வு மற்றும் அஜீரணம் போன்றவற்றை தீர்க்கவும் இந்த கிழங்கு ஆனது உதவுகிறது. பல உடல்நலக்கோளாறுகளுக்கு இந்த பூலாங்கிழங்கின் பொடி பயன்படுத்தப் படுகிறது. இந்த பூலாங்கிழங்கை உலர்த்தி இடித்து மற்றும் அரைத்து பவுடராக்கி வைத்துக் கொண்டால், பல உடல்நலக்கோளாறுகளுக்கு தேவையான போது பயன்படுத்தலாம். இந்த பூலாங்கிழங்கின் பொடியில் சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டால் வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் அல்லது இந்த பூலாங்கின் பொடியுடன்  தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தாலே இருமல், சளி ஆனது கட்டுப்படும்.

உடலில் காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி மற்றும் புண்கள் போன்றவை ஏற்பட்டால், சிறிது இந்த  பூலாங்கிழங்கின் பொடியை தண்ணீரில் குழைத்து பற்று போல போட்டால் நல்ல நிவாரணம் ஆனது கிடைக்கும். இந்த பூலாங்கிழங்கின் பொடி ஆனது முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை தருவதற்கும் பயன்படுகிறது. இது ஒரு வாசனை கிழங்கு என்பதால் அழகுசாதன பொருட்கள் தயாரிப்புகளில் இந்த கிழங்குகளை பயன்படுத்துகிறார்கள். இந்த பூலாங்கிழங்கு சருமத்துக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனை  பயன்படுத்தி வயதான தோற்றத்தை தள்ளிப்போடலாம். இந்த பூலாங்கிழங்கை வெறுமனே மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடலுக்கு பூசி குளித்தாலே, உடல் நாற்றம், வியர்வை, அரிப்பு, மற்றும் நமைச்சல் போன்றவை ஓடிவிடும். இந்த பூலாங்கிழங்கின் வேர்ப்பகுதிகளும் சிறந்த மருந்தாகின்றன.

பூலாங்கிழங்கு பவுடரை தயாரிக்கும் முறை :

  • பூலாங்கிழங்கு – 100 கிராம்
  • மரமஞ்சள் – 100 கிராம்
  • வெட்டிவேர் – 100 கிராம்
  • கார்போக அரிசி – 100 கிராம்
  • தாமரை கிழங்கு – 100 கிராம்
  • சந்தனக்கட்டை – 100 கிராம்
  • நெல்லிக்காய் – 100 கிராம்
  • அகில்கட்டை – 100 கிராம்
  • பெருஞ்சீரகம் – 100 கிராம்
  • கசகசா – 100 கிராம்
  • கோரைக்கிழங்கு – 100 கிராம்

போன்றவற்றை நாட்டு மருந்துகளில் வாங்கி தனித்தனியாக இவகைளை நிழலில் உலர்த்தி பிறகு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைக்க வேண்டும். பிறகு அரைத்த அனைத்தையும் ஒன்றாக கொட்டி கலந்து எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இந்த பொடியை 4, முதல் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே பயன்படுத்தலாம். மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால், சருமத்துக்கு நறுமணத்தை தந்து சருமத்தை கவசம் போல பாதுகாக்கும்.

Latest Slideshows

Leave a Reply