Por Thozhil Movie First Look: அசோக் செல்வன், சரத்குமார் இணையும் "போர் தொழில்"

அசோக் செல்வன்

தமிழ் திரையில் வளர்ந்து வரும் நடிகராக அசோக் செல்வன் திகழ்ந்து வருகிறார். இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் நடிகர் மட்டுமல்ல அரசியல் பிரபலமாகவும் திகழ்ந்து வருகிறார். அதிரடிஆக்‌ஷன் ஹீரோவான சரத்குமார் கடந்த சில நாட்களாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த காஞ்சனா 2, சென்னையில் ஒரு நாள், வாரிசு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது இவரும் “போர் தொழில்” படத்தில் இணைந்துள்ளார்.

Por Thozhil Movie First Look போஸ்டர் வெளியீடு

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் ‘போர் தொழில்’ படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் நிகிலா விமல் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

‘போர் தொழில்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. த்ரில்லர் ஜானரியில் உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசைமைத்துள்ளார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ‘கவுதம் வாசுதேவ் மேனன்’ வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply