Possible Choices For Tesla's 3 Billion Dollars : டெஸ்லா கார் ஆலைக்கான இடங்களைத் தேட ஒரு குழு இந்த மாதம் இந்தியாவுக்கு வருகை தருகிறது

டெஸ்லா அமெரிக்காவின் ஆஸ்ட்டினை தலைமை மையமாகக் கொண்டு இயங்கும் சந்தை மூலதனம் 559.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ள ஒரு முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது 29 மார்ச் 2024 நிலவரப்படி வழங்கப்பட்ட தகவல் ஆகும். டெஸ்லா நிறுவனம் நீண்ட காலமாக இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. சில காரணங்களால் அது தடைப்பட்டுக் கொண்டே வந்தது. தற்போது டெஸ்லா தனது கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான இடத்தை இந்தியாவில் தேடிக் கொண்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு (Possible Choices For Tesla’s 3 Billion Dollars) செய்ய இருப்பதாக கூறியிருக்கின்றது. எனவே இதற்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட மற்றும் கார் ஆலைக்கான இடங்களைத் தேட டெஸ்லா இந்த மாதம் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது

இந்தியாவில் டெஸ்லாவின் $3 பில்லியன் (Possible Choices For Tesla's 3 Billion Dollars) ஆலைக்கான சாத்தியமான தேர்வுகள் - குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு :

டெஸ்லாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலை ஆனது தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இந்த மூன்று மாநிலங்களில் ஏதேனும் ஓர் மாநிலத்திலேயே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மூன்று மாநிலங்களில் இருந்து கார்களை எளிதாக ஏற்றுமதி செய்யும் வசதி உள்ளதை டெஸ்லாவின் விருப்பம் காட்டுகிறது. குறிப்பாக இந்த மூன்று மாநிலங்களில் தமிழகத்தில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைவதற்கான சூழல் மிகப்பெரிய அளவில் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த கால ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமெரிக்க பயணத்தில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை விசிட் செய்தார் மற்றும் கார் உற்பத்தி ஆலையை தமிழகத்தில்  அமைப்பதற்கான அழைப்பை விடுத்திருந்தார். 

இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாபெரும் மாநாட்டைச் சமீபத்தில் நடத்தி உலக முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறார். தமிழ்நாடு ஆனது வெளிநாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு வரவேற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. விரைவில் டெஸ்லாவும் அதன் கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்தல் மற்றும் தயாரிப்புகளுக்கான வர்த்தக உரிமங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் டெஸ்லா அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின்பு பிரதமர் நரேந்திர மோடியை 2023 ஜூன் மாதம் மஸ்க் சந்தித்தார். இந்தியா கடந்த மாதம் குறைந்த பட்சம் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் உள்நாட்டு உற்பத்தியைத் தொடங்க உறுதியளிக்கும் கார் தயாரிப்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சில மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தது. எனவே இந்தியாவில் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை மிக விரைவில் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest Slideshows

Leave a Reply