Poster Of Vijay Fans Create A Sensation : விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Poster Of Vijay Fans Create A Sensation :

தலைவர்களின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என நடிகர் விஜய் அறிவுறுத்திய போதிலும் “போஸ்டர் அடி அண்ணன் ரெடி” என்று விஜய்யே பாடிட்டாரே என ரசிகர்கள் பயங்கரமாக போஸ்டர் அடிக்க ஆரம்பித்துள்ளனர். மதுரை விஜய் மக்கள் இயக்கம் ஒரு முனையில் போஸ்டர்களை ஒட்டி வரும் நிலையில், இன்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் (Poster Of Vijay Fans Create A Sensation) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விஜய்யும் தனது படங்களில் கொஞ்சம் அரசியல் வாடையை சேர்த்து வருகிறார். தொடர்ந்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் விஜய், கடந்த ஏப்ரல் மாதம் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் வரும் தேர்தலில் புதிய கட்சிகள் வரலாம். புதியவர்கள் வரலாம். எனவே பணத்திற்காக ஓட்டு போடுவதை நிறுத்திவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியிருந்தார். எனவே இதன் மூலம் அரசியலுக்கு வருகிறேன் என்ற செய்தியை அவர் கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள லியோ படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைக்குரிய போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக மதுரை ரசிகர்கள் ஆளுங்கட்சியை விமர்சித்து போஸ்டர்களை (Poster Of Vijay Fans Create A Sensation) ஒட்டுகிறார்கள். அவர்கள் ஒட்டக்கூடிய போஸ்டரில் விஜய் நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. “இன்று நேரு மைதானத்திற்கு வருவதை உங்களால் தடுக்க முடியும், ஆனால் நாளை உங்கள் கீழ் அமைய போகும் அரசாங்கத்தை யாராலும் தடுக்க முடியாது” என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலம் எடப்பாடி பழனிசாமி, நிகழ்காலம் மு.க.ஸ்டாலின், எதிர்காலம் தளபதி என போஸ்டர் ஒட்டி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் விடாது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒட்டியிருக்கும் போஸ்டரில், தம்பி பொறுத்தது போதும் வா, தமிழகத்தின் தலைமையை பிடிக்க நாங்கள் அமர்ந்த அரியணை உனக்காக காத்திருக்கிறது, நாளைய முதல்வர் நீயே என குறிப்பிட்டு எம்ஜிஆர் விஜய் கையை பிடித்து இருப்பது போலும் காமராஜர் விஜயின் தோளில் கை வைத்திருப்பது போன்றும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை (Poster Of Vijay Fans Create A Sensation) ஏற்படுத்தி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply