Prabhas Donates 10 Lakhs: 10 லட்சம் நன்கொடை வழங்கிய பிரபாஸ்
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் நடிப்பில் வெளியான அடுத்தடுத்து படங்கள் தோல்வியானது. தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு தான் ஆதிபுருஷ் படத்தை தேர்ந்தெடுத்தார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ராவணனாக சயீப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ரெட்ரோ பைல்ஸ், டி சீரிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டீசர்
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் ஆதிபுருஷின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசரை பார்த்து நெட்டிசன்கள் கேலி செய்தனர்.
ஆதிபுருஷ் படம் குறித்து இயக்குனர் ஓம் ராவத் கூறியதாவது. “ஆதிபுருஷ் ஒரு படம் மட்டுமல்ல, ராமர் மீதான நமது கலாச்சாரம்,பக்தி, வரலாறு மீதான நமது அர்ப்பணிப்பு மற்றும் பார்வையாளர்களுக்கு சிறந்த கட்சியை படமாக்க இன்னும் சிறிது நேரம் தேவை. இந்தியாவே பெருமைப்படும் வகையில் திரைப்படம் எடுப்பதில் உறுதியாக உள்ளோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு ஒரு ஆசிர்வாதம்.
படத்தின் ட்ரைலர் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலர் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் டீசரோடு ஒப்பிடுகையில் இது நன்றாக இருப்பதாக குறி வருகின்றனர். ட்ரைலர் இராமாயண கதையை கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதிபுருஷ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 16 அன்று வெளியாக உள்ளது.
ராமர் கோவிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமர் கோவிலுக்கு நடிகர் பிரபாஸ் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஆதிபுருஷ் படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்த நடிகர் பிரபாஸ், ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜையும் செய்தார். கோவில் நிர்வாக அதிகாரி ரமாதேவி அவர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபாஸ், அன்னதானத்திற்கும் மற்றும் கோவில் நிர்வாகத்துக்கும் 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.