Praggnanandhaa's Norwegian Chess Series : நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவின் வியத்தகு சாதனை

Praggnanandhaa's Norwegian Chess Series :

முதல்வர் ஸ்டாலின், “பிரக்ஞானந்தாவின் திறனையும் மற்றும் சாமர்த்தியத்தனமான ஆட்டத்தையும் கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது” என கூறியுள்ளார்.

நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி :

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரில் தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி (Praggnanandhaa’s Norwegian Chess Series) வியத்தகு வெற்றி பெற்றுள்ளார். நார்வே செஸ் தொடரின் மூன்றாம் சுற்றில், உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை செஸ் வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். நார்வே செஸ் தொடரின் ஐந்தாம் சுற்றில், செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும், ‘கிளாசிக்கல் செஸ்’ வகை போட்டியில் வீழ்த்தி மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார்.

நார்வே செஸ் தொடரின் தொடர் வெற்றி காரணமாக, ‘Top – 10’ தரவரிசைக்குள் பிரக்ஞானந்தா நுழைந்துள்ளார். செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் இந்த மிகப்பெரிய வெற்றியைப் பார்த்து உலகின் ஒட்டுமொத்த செஸ் உலகமும் வியப்படைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் நார்வே செஸ் தொடர் சாதனைக்கு (Praggnanandhaa’s Norwegian Chess Series_ வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் பிரக்ஞானந்தாவின் நுழைவு தமிழகத்துக்கு ஓர் நல்வரவாகும். செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வெற்றியால் தமிழகம் பெருமை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக X பக்கத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் செஸ் சாதனைகள் - ஓர் குறிப்பு

செஸ் வீரர் பிரக்ஞானந்தா தனது 8 வயது  முதல் பல சாதனைகளை படைத்துள்ளார்.

  • 2013ம் ஆண்டில் அவர் தனது 8-வது வயதில் அல்-ஐனில் (UAE) நடந்த யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் கோப்பையை வென்று முதன்முதலில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
  • அவர் தனது 10-வது வயதில் 2016 ஆம் ஆண்டில் சர்வதேச மாஸ்டர் ஆனார். 
  • கடந்த 2022 ஆண்டு, நார்வே உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக ஆர் பிரக்ஞானந்தாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. பிரக்ஞானந்தா உலக நம்பர் 1 இடத்தை வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார்.
  • பிரக்ஞானந்தா உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றவர். பிரக்ஞானந்தா செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தை தனது வழிகாட்டியாக நினைக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply