இந்தியாவின் முதல் திறந்த மூல பன்மொழி மாடல் Pragna-1B அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Homegrown GenAI ஸ்டார்ட்அப் Soket AI லேப்ஸ், Google Cloud உடன் இணைந்து பன்மொழி மாடல் Pragna-1B ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த Pragna-1B மாடல் ஆங்கிலம், இந்தி, பெங்காலி மற்றும் குஜராத்தி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் கிடைக்கும் என்று CNBC-TV18 தெரிவித்துள்ளது. இந்திய சூழலை மனதில் கொண்டு Pragna-1B அடித்தள மாதிரியானது உள்ளூர் தரவுகளில் பயிற்சியளிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Google Cloud-ல் கட்டமைக்கப்பட்ட, Pragna-1B வெளியீடு இந்திய மொழி தொழில்நுட்பத்தில் ஒரு சிறந்த முன்னோக்கிய பயணத்தைக் குறிக்கிறது. இந்த Pragna-1B மாடல் ஆனது நிறுவனங்களுக்கு மேம்பட்ட அளவிடுதல் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. ஸ்டார்ட்அப் Soket AI லேப்ஸ் நிறுவனம் ஆனது மொழி செயலாக்கப் பணிகளில் உள்ள ஒத்த வகை மாதிரிகளுடன் ஒப்பிடக்கூடிய “செயல்திறனை” அதன் Pragna-1B மாடல் அடைந்துள்ளதாக கூறுகிறது. டிரான்ஸ்பார்மர் டிகோடர்-மட்டும் மாடலைக் கொண்ட Pragna-1B ஆனது 2048 டோக்கன்களின் சூழல் நீளத்துடன் 1.25 பில்லியன் அளவுருக்களில் பயிற்சி பெற்றதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
Google Cloud India-வின் நிர்வாக இயக்குநர் பிக்ரம் சிங் பேடி உரை :
Google Cloud India-வின் நிர்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான பிக்ரம் சிங் பேடி, “நாங்கள் AI கண்டுபிடிப்புகளை ஜனநாயகப்படுத்த இந்தியாவில் Soket AI Labs உடன் கூட்டு சேர்ந்ததில் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய மொழி தொழில்நுட்பத்தில் Google Cloud-ல் கட்டமைக்கப்பட்ட, Pragna-1B வெளியீடு ஆனது ஒரு முன்னோடி பாய்ச்சலை மற்றும் பயணத்தைக் குறிக்கிறது. இந்த Pragna-1B மாடல் மேம்பட்ட அளவிடுதல் மற்றும் செயல்திறனை நிறுவனங்களுக்கு வழங்குகிறது. விரைவில் ஸ்டார்ட்அப் Soket AI லேப்ஸ் நிறுவனம் ஆனது அதன் AI டெவலப்பர் தளத்தை Google Cloud Marketplace-ல் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. Google Cloud ஆனது இந்த Pragna-1B மாடல்களை Google Vertex AI Model Registry-யில் பட்டியலிடவும் திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
Pragna-1B - Soket AI லேப்ஸின் நிறுவனர் அபிஷேக் அப்பர்வால் உரை :
Soket AI லேப்ஸின் நிறுவனர் அபிஷேக் அப்பர்வால், “நாங்கள் Google Cloud இன் AI உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், Pragna-1B இன் வளர்ச்சியில் செயல்திறன் மற்றும் செலவு-செயல்திறன் ஆகிய இரண்டையும் அடைந்துள்ளோம். இந்த Pragna-1B மாடல்கள் சமச்சீர் மொழிப் பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. இந்த Pragna-1B மாடல்கள் நிறுவனங்களுக்கு ஏற்ற வேகமான மற்றும் திறமையான டோக்கனை செயல்படுத்துகிறது. இந்த Pragna-1B மாடல்கள் ஆனது செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாடு ஆகியவற்றை வழங்குகிறது” என்று கூறினார்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்