Prasidh Krishna : நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா?

பெங்களூரு :

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் Prasidh Krishna இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய 3 அணிகளும் தங்களது இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், 4வது அணிக்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, அரையிறுதிச் சுற்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் பெங்களூரு வந்தனர். இன்று நடைபெற்ற வீரர்களுக்கான பயிற்சியில் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதே போல் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ரோகித் சர்மா மைதானத்திற்கு வந்தாலும் பயிற்சி செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் பயிற்சிக்கு வரவில்லை.

Prasidh Krishna :

இதன் காரணமாக நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக முகமது சிராஜ் மற்றும் பும்ரா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் மற்றும் Prasidh Krishna ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த Prasidh Krishna அணியில் சேர்க்கப்பட்டார். உலக கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்பட்ட நிலையில், சொந்த மண்ணில் உலக கோப்பை போட்டியில் களமிறங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply