Prathwait Regret : இந்த தோல்விக்கு நானே முக்கிய பொறுப்பு ஏற்கிறேன்...

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடந்து முடிந்த  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் தோல்வி குறித்து பேசி உள்ளார்.

Prathwait Regret - தோல்வி குறித்து பிராத்வெயிட் :

இதில் அவர் சொந்த மண்ணில் இவ்வாறு மோசமாக தோற்பது மிகப் பெரும் வேதனை அளிக்கிறது. எங்கள் அணி ஏற்கனவே உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் இருந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இந்த சோகத்தில் இருந்து வெளிவராத அந்த நாட்டு ரசிகர்கள் மீண்டும் இப்படி சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருப்பது அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அணி பேட்ஸ்மேன்கள் இரண்டு இன்னிங்ஸிலும் மோசமாக பேட்டிங் விளையாடியது முக்கிய காரணமாக உள்ளது. அவர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 280 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அது மட்டுமல்லாமல் அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதம் தாண்டவில்லை. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த தோல்வி குறித்து கேப்டன் பேசும்போது எங்கள் நாட்டு ரசிகர்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன். போட்டி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே நாங்கள் பின்னிலையில் உள்ளோம். எங்கள் அணி பேட்டிங்கில் சொதப்பியது மிகப்பெரும் பின்னடைவாகும். இது மட்டும் அல்லாமல் பிட்ச்சில் பந்து கூட அவ்வளவாக திரும்பவில்லை. இருந்தும் பேட்டிங்கில் சீக்கிரம் அவுட் ஆனது ஏமாற்றமாக உள்ளது. முக்கியமாக நான் ஆட்டம் இழந்தது மிகவும் பின்னடைவானது.

ஒரு கேப்டனாக நான் முன் நின்று ரன்கள் குவித்து எங்கள் அணி வீரர்களை வழிநடத்தி இருக்க வேண்டும். ஆனால் முதல் இன்னிங்ஸில் நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டோம். சீனியர் வீரர்கள் யாரும் பொறுப்பாக விளையாடாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சொல்லப்போனால் அதுவே தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினமானது.

இந்திய அணி :

இந்திய அணி மிகச் சிறந்த பீல்டிங் அமைப்பை பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் எவ்வளவு சிறப்பாக பில்டிங் அமைக்கிறோமோ அதை பொறுத்து தான் வெற்றி அமையும். இது எதுவுமே எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. இதுவே தங்கள் தோல்விக்கு காரணம் எனவும் கூறியிருந்தார்.

Latest Slideshows

Leave a Reply