Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

2024 பாராலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் D-64 பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் (Praveen Kumar Won The Gold Medal) வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

17-வது பாராலிம்பிக் தொடர் :

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த பாராலிம்பிக் தொடரில் 206 நாடுகளில் இருந்து சுமார் 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பாக 84 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இந்த 2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் D-64 பிரிவின் இறுதிப் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை (Praveen Kumar Won The Gold Medal) தட்டிச்சென்றார். 2.06 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாவது இடம் பிடித்த அமெரிக்காவின் டெரெக் லோசிடென்ட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Praveen Kumar Won The Gold Medal :

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கோவிந்த்கரில் பிறந்தவர்தான் பிரவீன் குமார். ஒரு குறுகிய காலுடன் பிறந்த பிரவீன் குமார் ஆரம்ப காலத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் போராடினார். இருப்பினும் பிரவீன் குமார் உடல் திறன் கொண்ட தடகளப் போட்டியில், உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. பிரவீன் குமாரின் திறமையை கண்டுபிடித்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் வழிகாட்டுதலின் படி அவர் உயரம் தாண்டுதல் மீது அதிக கவனம் செலுத்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் D-64 பிரிவில் 2.07 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பிரவீன் குமார் 2.05 மீ உயரம் தாண்டி தங்கம் வென்று ஆசிய சாதனையை முறியடித்ததால் பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் முடிவு சரியானது என்பதை நிரூபித்தார்.

Latest Slideshows

Leave a Reply