
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
இந்திய Realestate துறையில் முக்கியத்துவம் பெற்ற Prestige Estates Projects
இர்ஃபான் ரசாக் 1986 ஆம் ஆண்டு பெங்களூரில் நிறுவிய Prestige Estates Projects ஆனது Residential, Retail And Hospitality போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது. Prestige Estates Projects-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான இர்ஃபான் ரசாக் பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்திய பில்லியனர் தொழிலதிபர் ஆவார்.
ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்கும் இர்ஃபான் ரசாக் 12,930 கோடி நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார். இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவராக மற்றும் புகழ்பெற்ற சொத்து மேம்பாட்டாளர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். ஒரு சிறிய துணிக்கடையில் தொடங்கி பில்லியன் டாலர் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இர்ஃபான் ரசாக்கின் பயணம், பார்வை, கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் சக்தியை இந்த வெற்றி ஆனது எடுத்துக்காட்டுகிறது.
இர்ஃபான் ரசாக் - ஒரு குறிப்பு
இர்ஃபான் ரசாக் அக்டோபர் 30, 1953-ல் பெங்களூரில் பிறந்தவர். இர்ஃபான் ரசாக் தந்தை ரசாக் சத்தார் 1950ஆம் ஆண்டில் Prestige Group-ஐ ஒரு சாதாரண துணி மற்றும் தையல் கடையாக தொடங்கினார். தந்தையின் தையல் கடையில் இர்ஃபான் ரசாக் பணிபுரிந்து தனது தொழில் வாழ்க்கையைத் (Prestige Estates Projects) தொடங்கினார். இந்த ஆரம்பகால தொழில் முயற்சியானது தற்போது பெரிய Prestige Group பிராண்டாக வளர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான இர்ஃபான் ரசாக் தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் (Prestige Estates Projects) செல்லும் நபர் ஆவார். இர்ஃபான் ரசாக்கின் இளைய சகோதரர்களான ரெஸ்வான் மற்றும் நோமன், இவர்களது குடும்ப வணிகத்தில் ஒருங்கிணைந்த பாத்திரங்களை வகிக்கின்றனர் மற்றும் அதன் வெற்றிக்கு பங்களித்து அதிர்ஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இர்ஃபான் ராசாக் அக்டோபர் 09, 2024 தேதியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 49-வது இடத்தைப் பிடித்துள்ளார். எளிமையான தொடக்கத்திலிருந்து இந்தியாவின் பணக்காரராக உருவாகி இருக்கும் இவருடைய பயணம் பலருக்கும் ஒரு முன் உதாரணம் ஆகும். இர்ஃபான் ரசாக்கின் குடும்பத்தில் தொழில் முனைவோர் மனப்பான்மை ஆழமாக இயங்குகிறது.
இர்ஃபான் ரசாக்கின் தொடர் வெற்றி
இந்த Prestige நிறுவனம் வெற்றிகரமாக 285 திட்டங்களை நிறைவு செய்துள்ளது மற்றும் தற்போது 65 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 54 திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த Prestige Estate Projects நிறுவனம் பிரமிக்க வைக்கும் 75 மில்லியன் சதுர அடியிலான Project-களை வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்துள்ளது. இர்ஃபான் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினரின் தற்போதைய சொத்து மதிப்பு ஆனது 1 பில்லியன் டாலர்களை தாண்டி உள்ளது. இதற்கு Prestige Estate Project -ன் பங்குகளில் ஏற்பட்ட 60% உயர்வு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இர்ஃபான் ரசாக் பெங்களூரில் தனது இரண்டாவது ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட்டை 1990-ஆம் ஆண்டு விற்பனை செய்த (Prestige Estates Projects) பிறகு ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது தொழில்முனைவோர் ஆர்வம், மற்றும் படைப்பாற்றல் ஆர்வம் ஆனது ரியல் எஸ்டேட் துறையில் மேன்மேலும் சாதிக்க தூண்டியது. இப்படி தொடர்ந்து உழைத்து தனது நிறுவனத்தை Bangalore, Chennai, Kochi, Kozhikode, Hyderabad, மற்றும் Mumbai போன்ற பல நகரங்களிலும் விரிவுபடுத்தி வெற்றி பெற்றுள்ளார். Prestige Estate Project நிறுவனம் நடுத்தர வர்க்கத்தினரும் வீடு வாங்கும் வகையில் 2019-ஆம் ஆண்டிற்குள் வருடாந்திர விற்பனையை நான்கு மடங்காக உயர்த்தி தனது இலட்சிய இலக்கை அடைந்துள்ளது.
இர்ஃபான் ரசாக்கின் சாதனைகள்
Real Estate Excellence Award (2008), Best Developer Award (2009), Karnataka State City Planning Development and Entrepreneur Extraordinaire Award (2010), Fellow of the Royal Institution of Chartered Surveyors (FRICS) in 2013 போன்ற பல விருதுகளைப் இர்ஃபான் ரசாக் பெற்றுள்ளார். இர்ஃபான் ரசாக் 2015 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் CREDAI (தேசிய) தலைவராக பணியாற்றி உள்ளார். 2022 ஆம் ஆண்டில் இந்தியா டுடே குழுமத்தால் Best CEO in Real Estate ஆக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
இர்ஃபான் ரசாக்கின் நிகர மதிப்பு 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி $1.3 பில்லியனாக உள்ளது. தொழில் முனைவோர் மனப்பான்மை ஆனது இர்ஃபான் ரசாக்கின் குடும்பத்தில் ஆழமாக செயல்படுகிறது. இர்ஃபான் ரசாக் குடும்பத்தின் துணி மற்றும் தையல் கடை இன்றும் (Prestige Estates Projects) ரியல் எஸ்டேட் முயற்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
Latest Slideshows
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller