Prithvi Shah Assured: என்ன நடந்தாலும் என்னுடைய அதிரடி ஆட்டத்தை மட்டுமே பின்பற்றுவேன்…

நான் வழக்கமாக கிரிக்கெட்டில் விளையாடும் அதிரடி ஆட்டத்தை தான் விளையாட விரும்புகிறேன் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.

அதிரடி நாயகன் ப்ரித்விஷா:

இந்தியாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் சச்சின், சேவாக், லாரா ஆகியோரின் சாதனையை பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் அடுத்த கேப்டனாகப் பேசப்பட்ட பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கை 2021 ஜூலையில் முடிவடைந்தது.

அதன்பிறகு ஐபிஎல் தொடரில் ஃபார்மில் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முக்கியமாக ஷார்ட் பால் பிரச்சினையில் பிரித்வி ஷாவிற்கு சமாளிக்க முடியாத ஒன்றாக இருந்துள்ளது. இதனால் பிரித்வி ஷா மீண்டும் களமிறங்குவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணிக்காக பிரித்வி ஷா விளையாடினார்.

புஜாரா போல் ஆட முடியாது :

துலீப் டிராபியில் , பிரித்வி ஷா சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் 26 மற்றும் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப்ரித்வி ஷா, “எனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை மாற்ற விரும்பவில்லை. என்னை போல் புஜாரா, புஜாரா போல் நானும் ஆட முடியாது. இத்தனை வருடங்களாக நான் ரன் குவித்த விதத்தில் மட்டுமே விளையாட விரும்புகிறேன்.

நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமானதாக கருதுகிறேன். கடந்த ஆண்டு முதல் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறேன். ஆனால் டி20 கிரிக்கெட் அப்படி இல்லை. நான் நினைப்பதற்கு எதிராக ஐபிஎல் தொடர் நடந்தது. “ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமை டெஸ்ட் போட்டியில் தான் வெளிப்படும் என்பதில் உறுதியாக உள்ளேன். எது எப்படியானாலும் எனது வழக்கமான பேட்டிங்கை நான் தொடருவேன் என ப்ரித்வி ஷா உறுதி அளித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply