Priya Anand In Leo Movie : பிரியா ஆனந்த் கேரக்டரை சொன்ன லோகேஷ்

Priya Anand In Leo Movie :

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ ஆகும். இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் அதிக அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் அளித்த பேட்டிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் 67வது படமாக லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைந்துள்ளார். விஜய் கேங்ஸ்டராக வரும் இந்தப் படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். இப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு முடுக்கிவிட்டுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள், வீடியோக்கள், போஸ்டர்கள், டிரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து பேட்டிகள் கொடுத்து வருகிறார். லோகேஷ் பேட்டிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார் லோகேஷ். அவர் தனது அடுத்த படங்கள், எதிர்கால திட்டங்கள், LCU உள்ளிட்டவற்றையும் பகிர்ந்துள்ளார். சர்வதேச அளவில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகப் போற்றப்படும் லோகேஷின் லியோ திரைப்படம் விஜய்யைத் தாண்டி லோகேஷ் படம் என்ற கவனத்தை பெற்று வருகிறது.

Priya Anand In Leo Movie : இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் லியோ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த பிரியா ஆனந்த், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால், அவரது கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டு வந்தனர். இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனனின் மனைவியாக பிரியா ஆனந்த் (Priya Anand In Leo Movie) நடித்துள்ளார் என்ற ரகசியத்தை லோகேஷ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளதாக, லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். முன்னதாக விக்ரம் படத்திலேயே பிரியா ஆனந்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்காததால் தற்போது அவர் லியோவில் இணைந்துள்ளதாகவும் லோகேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.17 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல்செய்துள்ளது . குறிப்பாக வட அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது. இதுவே லியோ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு ஆகும். இதனால், இதுவரை எந்த விஜய் படமும் செய்யாத முதல் நாள் வசூலை நிச்சயம் லியோ செய்யும் என்று திரையுலகில் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply