Producer Nelson Dilipkumar : தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார். தற்போது தயாரிப்பு நிறுவனத்தை (Producer Nelson Dilipkumar) தொடங்கியுள்ளார். மேலும் முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3-ம் தேதி (இன்று) வெளியாகும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் :

இயக்குனராக வேண்டும் என்று பலர் ஆசையில், பல முன்னணி இயக்குனர்களிடம் கால் வலிக்க காத்திருந்தது போய் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். இப்போது வரும் இளம் இயக்குனர்கள் அனைவரும் வாய்ப்பை தேடாதே உருவாக்கு என்பதை மனதில் வைத்துக்கொண்டு குறும்படம் எடுத்து இன்று டாப் இயக்குனராக உருவாகி இருக்கிறார்கள். அப்படி தன்னம்பிக்கையுடன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியவர் நெல்சன் திலீப்குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் தொடரை இயக்கினார். இதன்முலம் சின்னத்திரையில் மாஸ் காட்டிவந்த நெல்சன், சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானியை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் பல பிரச்சனைகளால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. நெல்சனின் திரையுலக வாழ்க்கையை பாதியில் முடிந்துவிடுமோ என்று பேச ஆரம்பிப்பதற்குள் கோலமாவு கோகிலா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தைக் கொடுத்தார். இந்தப் படமும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் கோலமாவு கோகிலா போல ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தது. இதையடுத்து விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார். படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், படம் மிகப்பெரிய வசூலை பெற்றது. பீஸ்ட் படத்தின் மோசமான விமர்சனங்களால் சலிக்காமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பான் இந்தியா பாணியில் உருவாகி மாபெரும் வெற்றியடைந்து ரூ.650 கோடி வசூல் செய்தது. ஜெயிலரின் வெற்றி நெல்சனை அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது.

Producer Nelson Dilipkumar :

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்போவதாக (Producer Nelson Dilipkumar) அறிவித்துள்ளார். அதில், நான் என்னுடைய 20 வயதில் இருக்கும் போது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் நுழைந்தேன். இத்தனை வருடங்களில், எண்ணற்ற ஏற்ற தாழ்வுகள் இரக்கத்தின்போது, என் துறையில் வளர மட்டுமே உழைத்தேன். இதற்கிடையே எப்போதுமே எனக்கு சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது நிறுவனத்தின் பெயர் ஃபலமென்ட் பிக்சர்ஸ் ஆகும்.

எங்கள் நிறுவனத்தின் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் மூலம், ஏராளமான பார்வையாளர்களை மகிழ்விக்க புதுமையான மற்றும் பிரபலமான திரைப்படங்களை உருவாக்குவதே எங்கள் முதன்மை நோக்கமாகும். எங்களுடைய முழுமையான பார்வையைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது நிச்சயமாக வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். எங்களின் முதல் படத்தின் அறிவிப்பு மே 3ஆம் தேதி (இன்று) வெளியாகும். அதுவரை காத்திருங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி என்று நெல்சன் அறிக்கையில் (Producer Nelson Dilipkumar) தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply