Profit Record Of Fuel Companies In 2023-24 : 2023-24-ஆண்டு Profit Record Rs.81,000 Cr

3 Fuel Company Have Set A Sales Profit Record Of Rs.81,000 Cr :

3 எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் 2023-24 நிதி ஆண்டில் ரூ.81,000 கோடி லாப சாதனை படைத்து (Profit Record Of Fuel Companies In 2023-24) உள்ளன. இந்தியாவின் பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் 2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் ரூ.81,000 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 2023-24 நிதி ஆண்டின் ரூ.81,000 கோடி நிகர லாபத் தொகை, இதுவரை இல்லாத வருடாந்திர நிகர லாபத் தொகையாக (Profit Record Of Fuel Companies In 2023-24) கூறப்படுகிறது. அதாவது இந்த 3 நிறுவனங்களும் எண்ணெய் நெருக்கடிக்கு முந்தைய ஆண்டுகளில் ரூ.39,356 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தன. அத்துடன் ஒப்பிட்டு  பார்க்கையில், கடந்த 2023-24 நிதி ஆண்டில் இந்த 3 நிறுவனங்களின் நிகர லாபம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த 3 எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தங்களது பாராட்டத்தக்க வருடாந்திர முடிவுகளை வெளியிட்டதன் மூலம் பங்குதாரர்களின் நம்பிக்கைக்கு நல்ல வெகுமதியை அளித்துள்ளன.

Profit Record Of Fuel Companies In 2023-24 - 2023-24 நிதியாண்டின் சாதனைக்கான காரணம் :

கச்சா எண்ணெய்யின் விலை ஆனது சா்வதேச சந்தையில் குறைந்தபோது, அதன் காரணமாக எரிபொருள்களின் விலையையும் குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆனது சா்வதேச சந்தையில் வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை இந்த 3 எண்ணெய் நிறுவனங்களும் ஏற்கவில்லை. இந்த 3 எண்ணெய் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தபோது, கச்சா எண்ணெய்யின் விலையை ஏற்றாமல் தாங்கள் எரிபொருள்களை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக காரணம் தெரிவித்து உள்ளன. கடந்த 2023 – 24 நிதியாண்டில் சாதனை லாபத்தைப் பதிவு செய்ய இதுவே முக்கிய காரணமாக அமைந்து உள்ளன.

2022 - 23 நிதியாண்டு Vs 2023 - 24 நிதியாண்டு :

  • இந்தியன் ஆயில் நிறுவனம் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.39,618.84 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முந்தைய 2022-23 ஆம் நிதியாண்டில் நிகர லாபம் ரூ.8,241.82 கோடியாக இருந்தது.
  • பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.26,673.50 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முந்தைய 2022-23 ஆம் நிதியாண்டில் நிகர லாபம் ரூ.1,870.10 கோடியாக இருந்தது.
  • 2023-24 ஆம் நிதியாண்டில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் ரூ.14,693.83 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.8,974.03 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்திருந்தது.
  • 2023-24 ஆம் நிதியாண்டில் நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த லாபம் ரூ.86,000 கோடி ஆனது முந்தைய நிதியாண்டை விட 25 மடங்கு அதிகமாகும். எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2023-24 நிதியாண்டில் சாதனை லாபத்தைப் பதிவு செய்துள்ளன.

Latest Slideshows

Leave a Reply