Properties Sold Without Registration Up To Fine : பதிவு செய்யாமல் விற்கப்படும் மனைகளுக்கு அபராதம் என ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவிப்பு
பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு, கட்டிடம் மற்றும் மனைகளுக்கு ரூ.15000 வரை அபராதம் விதிக்கப்படும் (Properties Sold Without Registration Up To Fine) என ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. வீடு மற்றும் மனைகளில் உருவாகும் சிக்கல்களை களைவதற்காக மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சட்டத்தை உருவாக்கியது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்
இதன் அடிப்படையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை 112-ன் கீழ் கட்டிடம், மனை விற்பனை முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் விதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Real Estate Regulatory Authority (RERA) செயல்பட்டு வருகிறது. மேலும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யவும், புகார்களை விசாரிக்கவும், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் ஏற்படுத்தவும் கடந்த 2016-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 5381 சதுர அடி அல்லது 8 வீடு மனை இருந்தால் அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் ஆணையத்தில் கட்டாயமாக (Properties Sold Without Registration Up To Fine) பதிவு செய்ய வேண்டும்.
ஒருவேளை ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் வீடு மற்றும் மனையை விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது புகார் வரும்போது குறைந்தது 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை அபராதம் (Properties Sold Without Registration Up To Fine) விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறையை மாற்ற ரியல் எஸ்டேட் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக புதிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
15000 ரூபாய் அபராதம் (Properties Sold Without Registration Up To Fine)
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் மனைகளுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை போன்ற பெருநகர பகுதிகளில் பதிவு செய்யாமல் விற்கப்படும் மனைகளுக்கு ரூ.15000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி, ஈரோடு, தாம்பரம், வேலூர், தஞ்சாவூர், ஆவடி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் ரூ.12000 அபராதம் (Properties Sold Without Registration Up To Fine) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவில் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.4000 ஆயிரமும், ஊராட்சிகளுக்கு ரூ.3000 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்