PSLV-C60 Rocket Launched December 30th : பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

பிஎஸ்எல்வி-C60 Polar Satellite Launch Vehicle (PSLV) ராக்கெட் ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வரும் டிசம்பர் 30-ம் தேதி இரவு 9:58 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளதாக (PSLV-C60 Rocket Launched December 30th) இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் வெற்றி பயணம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2023-ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-3 விண்கலனையும், சூரியனின் மேற்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என இரண்டு சவாலான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தி உலக சந்தையில் முன்னணி அமைப்பாக இந்திய விண்வெளி மையம் திகழ்கிறது. மேலும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இஸ்ரோ விண்வெளியில் தனது சொந்த விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான முன் தயாரிப்பு திட்டமாக SpaceX எனும் திட்டம் (PSLV-C60 Rocket Launched December 30th) செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் விண்வெளியில் இரண்டு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த முயற்சியானது ககன்யான் திட்டத்திற்கும் மற்றும் இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இந்த SpaceX திட்டத்தின் மூலம் விண்வெளியில் இணைக்கும் ‘டாக்கிங்’ (Docking Experiment) எனும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ சோதனை செய்கிறது.

இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் திட்டம் (PSLV-C60 Rocket Launched December 30th)

இந்த PSLV-C60 ராக்கெட் மூலம் சுமார் 220 கிலோ அளவுள்ள SDX-1 மற்றும் SDX-2 என இரண்டு செயற்கைகோள்களும், 24 உப செயற்கைகோள்களும் பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் தனித்தனியாக 2 விண்கலன்களை செலுத்தி அவற்றை இணைய செய்யும் இந்த சோதனை வெற்றி பெற்றால் (PSLV-C60 Rocket Launched December 30th) இதனை சாதிக்கும் 4-வது நாடு எனும் பெருமையும் சர்வதேச விண்வெளி துறையில் நம் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply