Public Sector Banks Recruitment 2024 - பொதுத்துறை வங்கிகளில் 4,455 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,455 Probationary Officer PO/ Management Trainee (MT) பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (IBPS) அறிவிப்பை (Public Sector Banks Recruitment 2024) வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. தாராள சம்பளம், சலுகைகள் மற்றும் மதிப்புமிக்க வேலையுடன் வங்கிகளில் பணிபுரிய வேண்டும் என்பது வேலை தேடுபவர்களின் கனவாக உள்ளது. தமிழ்நாட்டில், TNPSC தேர்வுக்குப் பிறகு விண்ணப்பதாரர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக IBPS வங்கி தேர்வு உள்ளது. எஸ்பிஐ தவிர மற்ற பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பதவிகளுக்கான விவரங்களை தற்போது காணலாம்.

Public Sector Banks Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

  • பணி : Probationary Officer/ Management Trainee

  • பணியிட வங்கிகள் : 
  1. பேங்க் ஆஃப் இந்தியா – 885
  2. கனரா வங்கி – 750
  3. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – 200
  4. இந்தியன் ஓவர்சிஸ் பேங்க் – 260
  5. பஞ்சாப் நேஷனல் வங்கி – 200
  6. பஞ்சாப் & சிந்து வங்கி – 360 என மற்ற வங்கிகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
  • கல்வித்தகுதி : பணிகளுக்கு விண்ணப்பிக்கும் (Public Sector Banks Recruitment 2024) விண்ணப்பதாரர்கள், இரண்டு பதவிகளுக்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது.

  • வயது வரம்பு : வயது வரம்பைப் பொறுத்தவரை 01.08.2024 தேதியின்படி 20 வயது மற்றும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.

  • தேர்வு முறை : முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேவையான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175 ஆகும்.

  • விண்ணப்பிக்கும் முறை :
    விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பிக்க கடைசிநாள் : 21/08/2024

Latest Slideshows

Leave a Reply