PUC Certificate For Vehicles : வாகனங்களுக்கு PUC Certificate இல்லையென்றால் அபராதம் Rs.10,000

இந்தியாவில் வாகனம் வைத்திருப்பவர்கள் Registeration Certificate, Driving License உடன் கட்டாயமாக PUC Certificate (PUC – Pollution Under Control) வைத்திருக்க வேண்டும். எரிபொருள் என்ஜின் உடன் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் PUC Certificate அவசியமானதாகும். ஆனால் இந்த PUC Certificate ஆனது அந்த 1 வருடத்திற்கு மட்டுமே செல்லுப்படியாகும். சான்றிதழ் காலாவதியாகிவிட்டால், அதனை புதுப்பிக்க 7 நாட்கள், அதாவது 1 வாரம் அவகாசம் வழங்கப்படும்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் PUC Certificate தேவையில்லை. இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 190 (2)-ன்படி ICE எனப்படும் Internal Combustion Engine-னை கொண்டிருக்கும் எந்தவொரு வாகனத்திற்கும் PUC Certificate கட்டாயமானது. ஒரு வாகனத்திற்கு முறையான PUC Certificate இல்லையென்றால், அந்த வாகன உரிமையாளருக்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது Rs.10,000 அபராதம் அல்லது இரண்டுமே கூட (PUC Certificate For Vehicles) விதிக்கப்படலாம்.

இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு மையத்திலும் வாகன ஓட்டிகள் இந்த PUC Certificate பெறலாம். இந்திய அரசு ஆனது இதற்காகவே நாடு முழுவதும் இத்தகைய மையங்களை செயல்பாட்டில் வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள சில Petrol Banks-கள் கூட PUC Certificate வழங்குகின்றன. வாகன ஓட்டுநர்களிடம் PUC Certificate இல்லையென்றால், போலீசார் ரூ.1,000 அபராதம் விதிப்பார்கள். இதே தவறை மீண்டும் வாகன ஓட்டுநர்கள் செய்தால் அபராத தொகை ஆனது இரு மடங்காக வசூலிக்கப்படும். இந்த அபராத தொகை மற்றும் தண்டனைகள் ஆனது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

PUC Certificate For Vehicles - PUC Certificate சான்றிதழை வழங்கும் முறை :

PUC Certificate சான்றிதழை வழங்குவதற்கு வாகனம் எந்த அளவிற்கு மாசுக்களை உமிழ்கிறது என்பது சோதிக்கப்படும். அதற்காக வாகனத்தின் என்ஜின் வாயிலாக எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து வெளிவரும் கார்பன் அளவிடப்பட்டு அந்த வாகனத்திற்கு சான்றிதழை வழங்கலாமா? அல்லது வழங்கக்  கூடாதா? என்பதை சான்றிதழை வழங்கும் அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.

அதிகாரிகள் சான்றிதழை வழங்க மறுத்துவிட்டால், அந்த வாகனம் சாலையில் இயங்க முடியாது. அந்த வாகனம் PUC Certificate சோதனையில் வெற்றிப் பெற வாகனத்தில் இருக்கும் பழுதுகளை சரிச்செய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும். 4 சக்கர வாகனங்கள் மட்டுமின்றி 2 சக்கர வாகனங்களுக்கும் PUC Certificate அவசியமான ஒன்றாகும். புதியதாக ஷோரூமில் வாங்கப்படும் வாகனங்களுக்கு அந்த ஷோரூம் அதிகாரிகள் PUC Certificate வாங்கி (PUC Certificate For Vehicles) கொடுத்துவிடுவார்கள்.

Latest Slideshows

Leave a Reply