Puducherry Group C Recruitment 2025 : புதுச்சேரி அரசின் குரூப்-சி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள குரூப்-சி பதவிகளுக்கான (Puducherry Group C Recruitment 2025) புதுச்சேரி VA ஆட்சேர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கான தகுதிகள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப செயல்முறை பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Puducherry Group C Recruitment 2025

பணியின் விவரங்கள்

பல்துறை பணியாளர்கள் 9 பணியிடங்கள் மற்றும் கிராம உதவியாளர் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 8, முன்னாள் ராணுவத்தினர் பிரிவு 8, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு 10, பொது பிரிவில் 38 என மொத்தமாக 63 பணியிடங்கள் நிரப்ப உள்ளன.

வயது வரம்பு

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 14.06.2025 தேதியின் படி 30  வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். MBC, OBC, BC, BCM ஆகிய பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், SC பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC பிரிவுகள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி

கிராம உதவியாளர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாட்டில் 3 மாத பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். பல்துறை ஊழியர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை

Puducherry Group C Recruitment 2025 - Platform Tamil

புதுச்சேரி அரசின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கிராம உதவியாளர் (Puducherry Group C Recruitment 2025) பதவிக்கு மட்டுமே கணினித் திறன் தேர்வு நடத்தப்படும். இதில், பொதுப் பிரிவினர் 30% மதிப்பெண்களும், எஸ்சி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 20% மதிப்பெண்களும், பிற பிரிவினர் 25% மதிப்பெண்களும் பெற வேண்டும். கிராம உதவியாளர் பதவிக்கான கணினித் திறன் தேர்வு 40 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2025, 3 மணி வரை விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply