Puranam Ammal Received A Special Award : பூரணம் அம்மாளுக்கு இன்று முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார்

Puranam Ammal Received A Special Award :

26/01/2024 இன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையை சேர்ந்த ஆயி எனும் பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி (Puranam Ammal Received A Special Award) கவுரவித்தார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள யா.கொடிக்குளம் பகுதியை சேர்ந்த ஆயி எனப்படும் பூரணம் அம்மாள் கனரா வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருபவர்.

பூரணம் அம்மாளின் மகள் ஜனனி பாரம்பரிய நிலத்தை தானமாக வழங்க வேண்டுகோள் :

கனரா வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த ஆயி எனப்படும் பூரணம் அம்மாளின் கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். அதனால் வாரிசு அடிப்படையில் கணவருடைய பணி ஆனது பூரணம் அம்மாளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பூரணம் அம்மாள் உதவியாளர் பணியை செய்துகொண்டு தனது ஒரேயொரு மகளான ஜனனியை வளர்த்து வந்திருக்கிறார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பூரணம் அம்மாளின் மகள் ஜனனி உயிரிழந்துவிட்டார். பூரணம் அம்மாளின் மகள் ஜனனி உயிரிழக்கும்போது அவர்களது  பாரம்பரிய நிலத்தை கொடிக்குளம் அரசு பள்ளியை மேம்படுத்த தானமாக வழங்க வேண்டும் என்று தாயிடம்  கூறியிருந்திருக்கிறார்.

விளம்பர நோக்கம் இல்லாமல் வழங்கப்பட்ட நன்கொடை :

ஜனனியின் நினைவாக அரசு பள்ளியை தரம் உயர்த்த ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை ஆயி அம்மாள் பள்ளி கல்வித்துறைக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார். கோடி கோடியாய் பணம் இருப்பவர்கள் வாரி வழங்கும் போது அதற்கான விளம்பரத்தை தேடிக் கொள்வது  எப்போதும் நடப்பதுதான். அவர்கள் நன்கொடை வழங்குவதன் பின்னணியில் விளம்பர நோக்கம் இருக்கும். ஆனால் ஒரு சாமானிய குடும்பத்தை சேர்ந்த பெண்மணி எந்தவிதமான விளம்பரத்தையும் நாடாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு பெறும் நிலத்தை கொடையாக கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும். இவரது கொடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என பல்வேறு தரப்பினரும் ஆச்சரியத்துடன் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

பெண் குழந்தைகள் துவண்டுவிடாமல் கல்வியை பிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் :

செய்தியாளர்களிடம் விருது பெற்ற (Puranam Ammal Received A Special Award) பூரணம் அம்மாள் பேசுகையில், “தொடக்கத்தில் இந்த பள்ளி  ஆரம்ப பள்ளியாகத் தான் இருந்தது. இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக மேலும் தரம் உயர்த்த வேண்டி நான் எனது பாரம்பரிய நிலத்தை வழங்கியிருக்கிறேன். இந்த பள்ளி ஆனது இந்த ஆண்டிலேயே அதன் தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய  கணவர் முன்பே இறந்துவிட்டார். மேலும்  என்னுடைய மகளும் இப்போது உயிருடன் இல்லை. இருந்த போதும் நான் ஒரு தனி பெண்ணாக  நின்று இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு, ஏராளமான சிரமங்களையும்  எதிர்கொண்டு வாழ்க்கையில் இந்த ஒரு   இடத்திற்கு வந்திருக்கிறேன்.  என்னைப்போல  ஒவ்வொரு பெண்ணும் விடா முயற்சியோடு வாழ்க்கையில் போராடி, கல்வியின் துணையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று”  கேட்டுக்கொண்டார்.

Latest Slideshows

This Post Has 4 Comments

  1. Sherry

    I really liked your website

  2. Elizabeth

    Great article! I appreciate the clear and insightful perspective you’ve shared.

Leave a Reply