Pushpa 2 Teaser : அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் (Pushpa 2 Teaser) வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகம் எப்படி இந்தியா முழுவதும் ஹிட் ஆகி அல்லு அர்ஜுனை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியதோ அதேபோல் இந்த பாகமும் ஹிட்டாகும் என அல்லுவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் புஷ்பா 2 படத்தின் டீசர் (Pushpa 2 Teaser) வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

புஷ்பா 2 :

சுகுமார் இயக்கத்தில் மெகா ஹிட் ஆன படம் புஷ்பா. பான் இந்தியாவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பாகுபலிக்குப் பிறகு பல மொழிகளில் தெலுங்கில் ஹிட் அடித்த படம் என்ற பெயரையும் புஷ்பா படம் பெற்றுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இலங்கை மற்றும் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, படத்தை பார்த்த சுகுமார், படம் திருப்தி அடையாததால், ரீ-ஷூட் நடத்தப் போவதாக ஒரு தகவல் வந்தாலும், அது வெறும் வதந்தி என்று பின்னர் உறுதியானது. சூழல் இப்படி இருக்க, படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான வேகத்தில் தொடர்ந்தது. படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் கடந்த ஆண்டு வெளியானது. அதில் அல்லு அர்ஜுன் இரவில் வருவது போன்ற காட்சிகளும், அவரது வருகையை மக்கள் கொண்டாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட் ஆகும் என்று நம்புகிறார்கள்.

Pushpa 2 Teaser :

இந்நிலையில், அல்லு அர்ஜுன் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்தனர். புஷ்பா 2 படத்தின் டீசர் (Pushpa 2 Teaser) அல்லு அர்ஜுன் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக புஷ்பா 2 டீம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிமிட டீசரில் ஆக்‌ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. தற்போது புஷ்பா 2 படத்தின் டீசர் (Pushpa 2 Teaser) சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply