Puthiya Thalaimurai Lifetime Achievement Award எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது

Puthiya Thalaimurai Lifetime Achievement Award - எழுத்தாளர் சிவசங்கரியின் சிறந்த 60 ஆண்டுகால இலக்கியப்பயணம் கௌரவிக்கப்பட்டது :

சிவசங்கரி ஒரு சிறந்த தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் 1968-லிருந்து நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் தனது படைப்பாற்றல்களை  வழங்கி வருகிறார். சிவசங்கரி தனது இலக்கியப் பயணத்தை தொடங்கி எழுத்தாளர் ஆவதற்கு முன்னர் நேஷனல் சிட்டி வங்கியில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். அவரது கணவர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் மண்டல மேலாளராகப் (BHEL – Regional Manager) பணியாற்றியவர். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்னும் சிற்றூரில் சிவசங்கரியின் மாமனார் தொடங்கிய தொழிற்சாலையை கவனித்து கொள்வதற்காக சிவசங்கரியும் அவரது கணவரும் அவர்களது வேலைகளைத் துறந்துவிட்டு அவ்வூருக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.

1968 மே 12 ஆம் நாளிட்ட கல்கி வார இதழில் எழுத்தாளர் சிவசங்கரி யின் முதல் சிறுகதை “அவர்கள் பேசட்டும்” ஆனது பிரசுரமாகியது. இது ஒரு குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை ஆகும். இவரது  இரண்டாவது குடிகாரனைப் பற்றிய “உனக்குத் தெரியுமா?” என்ற சிறுகதை ஆனது ஆனந்த விகடன் வார பத்திரிகையில் பிரசுரமானது. அதைத்தொடர்ந்து எழுத்தாளர் சிவசங்கரி பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள் மற்றும் கட்டுரைத் தொடர்களை எழுதியிருக்கிறார்.

Puthiya Thalaimurai Lifetime Achievement Award : இதுவரை எழுத்தாளர் சிவசங்கரி 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள் மற்றும் 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவற்றை படைத்துள்ளார்.   2010 ஆம் ஆண்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு ‎இலக்கியம் எனும் வகைப்பாட்டில் சிறந்த நூலாசிறியருக்கான பரிசு ஆனது சிவசங்கரிக்கு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு ‘இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்புக்காக’ வழங்கப்படும் விருது ஆனது இவரது இந்திய இணைப்பு என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு இவரது ‘சூர்ய வம்சம்’ நுாலுக்காக சரஸ்வதி சம்மான் விருதானது வழங்கப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply