QR Code For EB Bill Payment : EB மின் கட்டண வசதிக்காக மிகவும் பயனுள்ள QR அறிமுகம் செய்துள்ளது

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள OR கோடு என்ற புதிய வசதியால் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்வது மிகவும் எளிமையான ஒன்றாக மாறியிருக்கிறது. வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியோருக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது. அவர்கள் வேறு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ஆனது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் மூன்று அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. தடையில்லா மின்சாரத்தை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவது இதன் நோக்கம் ஆகும். தமிழ்நாட்டில் அனல், நீர், காற்று, அணு மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை கொண்டு மின்சராம் ஆனது தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மரபுசாரா எரிசக்தி திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பணிகள் ஆனது நடந்து வருகின்றன.

மின் மீட்டர்கள் மூலம் தங்கள் வீடுகளில் வசதியை பெற்றிருக்கும் உரிமையாளர்கள் தான் சம்பந்தப்பட்ட மின் மீட்டர்களுக்கு மொபைல் எண்ணை பதிவு செய்து வைத்திருப்பர். தங்கள் வீடுகளில் குடியிருக்கும் வாடகைதாரர்களுக்கு மின் கட்டண விவரத்தை கூறி பணத்தை வாங்கி வீட்டு உரிமையாளர்களே கட்டணத்தை செலுத்தி விடுவர். இல்லையெனில் மின் மீட்டர் எண்களை தங்கள் வீடுகளில் குடியிருக்கும் வாடகைதாரர்களுக்கு வழங்கி மின்சார அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமோ மின்சார கட்டணத்தை செலுத்தி கொள்ள அறிவுறுத்துவர். தமிழக அரசு தற்போது மின் பயன்பாடு தொடர்பாக நுகர்வோர் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்த QR கோடு வசதி என்பது மொபைல் எண் பதிவை எளிமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது

மொபைல் எண்ணை பதிவு செய்வதால் பெறும் பயன்கள் :

  • மின் பயன்பாட்டு கட்டணங்கள் ஆனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் மின் இணைப்பை பெறுதல், பராமரிப்பிற்காக மின்சாரம் துண்டிக்கப்படுதல், மின் பழுது உள்ளிட்ட தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
  • ஒருவேளை மொபைல் எண்ணை பதிவு செய்யப்படாவிடில் நுகர்வோருக்கு எந்தவித தகவலும் வந்து சேராது.
  • ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எண்களுக்கு மட்டுமே தகவல்கள் ஆனது தொடர்ந்து செல்லும். புதிதாக குடியேறும் நபர்களுக்கு எந்தவித தகவல்களும் சென்று சேராது.

எனவே வாடகைதாரர்கள் அவசியம் தங்களது மொபைல் எண்ணை முறையாக பதிவு செய்ய வேண்டும். மின்சார வாரியம் ஆனது  இதற்காக உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தங்கள் இணையதளத்தின் மூலம் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளும் வசதி அமலில் இருக்கிறது.

QR Code For EB Bill Payment - QR கோடுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் :

மொபைல் எண்ணை நுகர்வோர் பதிவு செய்து கொள்வதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் QR கோடு வசதியை (QR Code For EB Bill Payment) அறிமுகம் செய்துள்ளது. இந்த QR கோடுகள் ஆனது அனைத்து மின்வாரிய மண்டல அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும். மின்வாரிய மண்டல மூத்த அதிகாரிகள் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுவர்.

  • நுகர்வோர் முதலில் வீட்டு உரிமையாளரா? இல்லை வாடகைதாரரா? எனக் கேட்கப்படும் கேள்விக்கு அதில் சரியான ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண், மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். தேவையற்ற மொபைல் எண்களை நீக்க வேண்டும்.
  • நுகர்வோர் இதன்மூலம் இ-மெயில் ஐடியையும் பதிவு செய்யலாம்.

புதிய வீடுகளுக்கு வாடகைக்கு செல்வோர், பழைய வீடுகளை விலைக்கு வாங்கி புதிதாக குடியேறுவோரும் மின் மீட்டர்களின் பதிவு செய்யப்பட்ட பழைய எண்களை மாற்றுவதற்கு QR கோடு வசதி (QR Code For EB Bill Payment) எளிதான ஒன்றாக அமையும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகளை கண்டறிந்தால் உடனே தெரிவிக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply