சென்னையில் "சர்வதேச" நிறுவனம் QUALCOMM Design Centre 14/03/2024-ல் தொடக்கப்படுகிறது

சென்னையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் ஒப்பந்தமாக மட்டும் இல்லாமல், அவை முதலீடாக மாறவும் தமிழக அரசு ஆனது தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது தமிழ் மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெற்றுள்ளது.

குவால்காம் நிறுவனம் - ஒரு குறிப்பு :

  • அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் சர்வதேச அளவில் முக்கியமான டாப் செமிகண்டக்டர் நிறுவனங்களில் ஒன்று ஆகும்.
  • குவால்காம் நிறுவனம் ஆனது   செமிகண்டக்டர், மென்பொருள், டெலிகாம் உபகரணங்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரு சிறந்த நிறுவனம் ஆகும்.
  • குவால்காம் நிறுவனத்தின் வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் ரொம்பவே மேம்பட்டது ஆகும். 
  • குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் வரிசை பிராசசர்கள் மொபைல் நிறுவனங்கள் மத்தியில் ரொம்பவே புகழ்பெற்றவை ஆகும்.
  • குவால்காம் நிறுவனம் உருவாக்கிய 3G, 4G, 5G என பல தொழில்நுட்பங்கள் மொபைலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  • குவால்காம் நிறுவனத்திற்கு Internet Of Things மற்றும் Computing போன்ற பிற தொழில்களிலும் கூட நல்ல இடம் இருக்கிறது.

உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற குவால்காம் நிறுவனம் ஆனது தனது ஆய்வு மையங்களை பெரும்பாலும் அமெரிக்காவில் தான் அமைத்துக் கொள்ளும். குவால்காம் நிறுவனத்திற்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வெளியே இந்தியாவில் தான் அதிகபட்ச ஆராய்ச்சி சென்டர்கள் உள்ளன. குவால்காம் நிறுவனத்திற்கு ஏற்கனவே ஹைதராபாத், பெங்களூர், சென்னை மற்றும் நொய்டாவில் ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றது. மேலும் தற்போது இந்தியா நாட்டில் குவால்காம் நிறுவனத்தில் சுமார் 17,000 பேர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் குவால்காம் நிறுவனம் (QUALCOMM Design Centre) ஆனது சென்னையில் மற்றொரு ஆராய்ச்சி மையத்தை ஆரம்பிக்கிறது.

QUALCOMM Design Centre - சென்னையில் குவால்காம் நிறுவனம் Research And Development Centre ஆரம்பிக்க உள்ளது :

சென்னையில் குவால்காம் நிறுவனம் ஆரம்பிக்க உள்ள தனது புதிய ஆராய்ச்சி மையத்தில் பல கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. சென்னையில் அமையும் இந்த QUALCOMM Design Centre ஆனது Wireless மற்றும் 5G தொழில்நுட்பத்தில் தனது கவனத்தை செலுத்த உள்ளது. குவால்காம் நிறுவனம் தனது புதிய Design Centre சென்னையில் உள்ள ராமானுஜன் IT சிட்டியில் சுமார் ₹177 கோடி முதலீட்டில் செய்வதாக அறிவித்துள்ளது. குவால்காம் நிறுவனம் தனது புதிய Design Centre வரும் 14ஆம் தேதி திறக்க உள்ளது. அந்த புதிய Design Centre குவால்காம் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டியானோ அமோன் அடுத்த வாரம் திறந்து வைக்கிறார். இத்திட்டம் குறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்திட்டத்தின்  (QUALCOMM Design Centre) மூலம் 1,600 பேர் நேரடியாக வேலை வாய்ப்பும் மற்றும் மறைமுகமாகப் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பும் பெறுவார்கள். வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ள புதிய Design Centre தொடக்க நிகழ்வில் பல முக்கிய நபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply