Raayan Box Office Collection : ராயன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசைமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநராகவும், நடிகராகவும் தனுஷ் பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ராயன் படம் முன்பதிவில் மட்டும் 6 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் பிறந்தநாள் :

நடிகர் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், அற்புதமான வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராயன் படத்தின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தனுஷ் மற்ற நடிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதத்தை பார்த்தால், தனுஷ் ஒரு பிறவி இயக்குனராக இருப்பார் என்று தெரிகிறது. அவர் எவ்வளவு அழகாக சொல்லிக்கொடுக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடனம் முதல் சிறிய அசைவுகள் வரை, தனுஷ் மற்ற நடிகர்களிடம் இருந்து வேலை வாங்கும் விதத்தை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Raayan Box Office Collection :

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ராயன் திரைப்படம் மூன்றாம் நாளான நேற்றும் வசூல் வேட்டை தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான திரையரங்குகளில் ராயன் படம் ஹவுஸ் புல்லாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. மூன்று நாட்கள் முடிவில் ராயன் திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் (Raayan Box Office Collection) செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் ரூ.7.5 கோடியும், இதர இந்தியாவில் ரூ.10 கோடியும் வசூலித்துள்ளது ராயன். ராயன் படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் கெரியரில் மிக வேகமாக ரூ.75 கோடி வசூலைக் கடந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply