Raayan Movie Latest Update : சன் பிக்கர்ஸ் வெளியிட்ட ராயன் அப்டேட்

தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கியுள்ளார். விரைவில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘ராயன்’ படத்தின் மிரட்டலான அப்டேட் (Raayan Movie Latest Update) ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக இருக்கும் தனுஷ், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக பொங்கலை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகி இருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாகக் கொண்டது. இதில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையும் உரிமைக்கான போராட்டம் குறித்து அருண் மாதேஸ்வரன் பேசியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Raayan Movie Latest Update :

கேப்டன் மில்லர்‘ வெற்றிக்குப் பிறகு தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். பவர் பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். முந்தைய படத்தை பீல்குட் ரொமான்ஸ் படமாக இயக்கிய தனுஷ், தனது 50வது படத்தை கேங்ஸ்டர் கதையாக இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘ராயன்‘ என டைட்டில் வைத்துள்ளார். மேலும் இதில் எஸ்.ஜே. சூர்யா, பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், சரவணன் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை (Raayan Movie Latest Update) சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தனுஷ்- காளிதாஸ் ஜெயராம், தனுஷ் செல்வராகவன் & சந்தீப் கிஷன் ஆகிய மூன்று காம்போவில் எந்த கூட்டணிக்கு மரண வெயிட்டிங் என கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே பல கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply