Raayan Movie New Poster : துஷாரா விஜயனின் லுக் அறிமுகம்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது 50 படமாக உருவாகியுள்ள படம் ராயன். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. தனுஷ் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் நடிகர்களின் தோற்றத்தை வெளிப்படுத்தும் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார். பவர் பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷுடன் காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

ராயன் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளார். முழுக்க முழுக்க இளைஞர்களை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கிடையில், அவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் D51 படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடைபெறவுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தாராவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராயன் :

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையுடன் கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான கேப்டன் மில்லர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷ் சளைக்காமல் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அவரது அடுத்த படமான D50 ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் ராயன் படத்தை இயக்கி நடித்து வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படத்தின் இயக்குனரும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

படத்தில், அவர் ரோட்டோரத்தில் சாப்பாடு கடை நடத்துவதாகவும், அவரது ஃப்ளாஷ்பேக்கில், அவர் ஒரு கேங்ஸ்டர் என்றும், அது அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்தால் என்ன நடக்கிறது என்பதும் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது. அவரது இளைய சகோதரர்களாக காளிதாஸ் மற்றும் சந்தி கிஷன் நடித்துள்ளனர். மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தனது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ், அடுத்தடுத்த நாட்களில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலரின் கேரக்டர் லுக்கை வெளியிட்டார்.

Raayan Movie New Poster :

இந்நிலையில் இன்றைய தினமும் கேரக்டர் அறிமுகம் தொடர்த்துள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயனின் கேரக்டர் லுக் (Raayan Movie New Poster) இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் மிகவும் எளிமையான தோற்றத்தில், அவர் மிகவும் சோகமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த தோற்றம் (Raayan Movie New Poster) அவர் வானத்தை நோக்குவதைக் காட்டுகிறது. ராயன் உலகத்தில் துஷாரா விஜயன் என்று கேப்ஷனில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply