Raayan Movie Review : ராயன் திரைப்படத்தின் திரை விமர்சனம்

நடிகர் தனுஷ் இயக்கி தானே நடித்து வெளியாகியுள்ள ராயன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை (Raayan Movie Review) தற்போது காணலாம். நெஞ்சை உலுக்கும் கதை மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், இந்தப் படத்தில் ஆக்ஷன் கதையை முழுமையாக கையில் எடுத்து வெற்றியும் கண்டுள்ளார். தனுஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அறிமுகமான ராயன் படம் இன்று வெளியாகிறது. இவரது 50 வது படமான இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப், அபர்ணா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் எப்படி இருக்கிறது என்று தற்போது காணலாம்.

ராயன் மையக்கருத்து :

காத்தவராயன், பாஸ்ட் புட் ஹோட்டல் நடத்தி, அண்ணனாக மட்டுமின்றி, அப்பாவாகவும் இருந்து, தன் இரு சகோதரர்களையும், தங்கையையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இதற்கிடையில் அவரது இரண்டாவது சகோதரர் முத்து குடித்துவிட்டு தொடர் பிரச்சனையை ஏற்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியின் முக்கிய புள்ளியான ஒருவரின் மகன் கொல்லப்படுகிறான். அதற்கு பழிவாங்கும் நோக்கில் கும்பல் முத்துவை கொலை செய்யும் முன், ராயன் கும்பலை ஒட்டு மொத்தமாக முடித்து விடுகிறார். அவன் எடுத்த கத்தி அவனை எங்கே கொண்டு நிறுத்தியது? கடைசியில் அவன் என்ன செய்தான்? இதற்கிடையில், பெரிய திட்டத்துடன் வரும் போலீஸ் அதிகாரி என்ன செய்கிறார்? ராயனின் தங்கையின் திருமணம் நடந்ததா? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் கதையாகும்.

Raayan Movie Review :

நடை, உடை, பாவனை என அனைத்திலும் கறார் அண்ணனாகவும், உறவுக்கு ஒன்றென்றால் திமிர் பிடிக்கும் அரக்கனாகவும் தனுஷ் நடிப்பில் மிரட்டுகிறார். சகோதரர்களாக சந்தீப் மற்றும் காளிதாஸ் மற்றும் தங்கையாக துஷாரா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை துல்லியமாக ஏற்றுள்ளனர். போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நெஞ்சைத் தொடும்படி நடித்துள்ளர்னர். தான் இயக்குநராக அறிமுகமான கடந்த படத்தில் நெஞ்சை உலுக்கும் கதையை படமாக்கிய தனுஷ், இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை கையில் எடுத்து வெற்றியும் கண்டுள்ளார்.

கதாபாத்திர தேர்வு, நடிகர்களிடம் நடிப்பை பெறும் விதம், சுவாரசியமான திரைக்கதை என அனைத்திலும் நடிப்பில் மட்டுமல்ல, இயக்கத்திலும் தான் அரக்கன் என்பதை நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தனது ஒளியமைப்பால் கதைக்கு உயிர் கொடுக்கும் விதம் அற்புதம். பின்னணி இசையிலும் பெரும் முயற்சியைக் கொடுத்து தான் ஒரு இசைப் புயல் என்பதை நிரூபித்துள்ளார். ஆக மொத்தம் படம் ஒரு பிளாக்பஸ்டர் என ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை (Raayan Movie Review) தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply