Raayan Trailer : ராயன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படத்தின் ட்ரெய்லர் (Raayan Trailer) வெளியாகியுள்ளது.

தனுஷ் :

இந்திய சினிமாவின் தனித்துவமான நடிகராகக் கருதப்படும் தனுஷ், நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தனுஷ் தொட்டதெல்லாம் தங்கம் தான். சிறந்த நடிகருக்கான தேசிய விருது, காக்கா முட்டை படத்தின் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருது என இளம் வயதிலேயே பெரிய பாராட்டுகளை பெற்றவர் தனுஷ். தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என தனது நடிப்புத் திறமையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்தவர் தனுஷ்.

Raayan Trailer :

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகியுள்ளது. இப்படத்தை தனுஷ் தானே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். சந்தீப் கிஷன், ஜெயராமன், காளிதாஸ், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாக்கி கலை வடிவமைப்பை செய்துள்ளார். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூலை 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசியது ரசிகர்களை கவர்ந்தது. மேலும் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் படம் பற்றி பேசியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் (Raayan Trailer) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகரும் இயக்குனருமான தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் கடைசியாக பவர் பாண்டி படத்தை இயக்கினார். இந்த படத்தில் ராஜ்கிரண், மடோனா செபாஸ்டியன், ரேவதி மற்றும் பலர் நடித்தார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தனுஷ் படங்களை இயக்குவதில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி அதில் நாயகனாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் ராயன் படத்தில் தனுஷின் நடிப்பையும், இயக்கத்தையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிப்பது குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் (Raayan Trailer) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply