Ragava Lawrence Joins With Vengat Mohan: விஷால் பட இயக்குனருடன் இணையும் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தற்போது முழுநேர நடிகராக மாறி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Ragava Lawrence Joins With Vengat Mohan: ராகவா லாரன்ஸின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 2019-ம் ஆண்டு இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடித்த ‘அயோக்யா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘டம்பர்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெங்கட் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் (Ragava Lawrence Joins With Vengat Mohan) நடிக்க இருப்பதாகவும், இயக்குனர் வெங்கட் மோகன் சொன்ன கதை ராகவா லாரன்ஸுக்கு பிடித்ததால் இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் இந்த படத்தை தமிழ் திரை உலகின் முன்னணி நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ‘சந்திரமுகி 2’ மற்றும் ‘ருத்ரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. அதுமட்டுமின்றி ‘அதிகாரம்’, ‘ஜிகர்தண்டா 2’ படங்களிலும் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வெங்கட் மோகன் இயக்கும் படத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Latest Slideshows