Raghava Lawrence Talk About Vijayakanth Son : விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க ரெடி

Raghava Lawrence Talk About Vijayakanth Son :

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படங்களில் சிறப்பு வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence Talk About Vijayakanth Son) தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை தொடர்ந்து, தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பிரபலங்கள் பலருக்கும் விஜயகாந்தின் இறப்பிற்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விஜயகாந்தின் இல்லத்திற்க்கே திரையுலக பிரபலங்கள் பலரும் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்சூம் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ (Raghava Lawrence Talk About Vijayakanth Son) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், அனைவருக்கும் வணக்கம். நேற்று முன்தினம் நானும் அம்மாவும் விஜயகாந்த் சமாதிக்கு சென்றிந்தோம். அப்படியே அவரின் வீட்டிற்கு சென்றோம். விஜயகாந்தின் மனைவி, இரண்டு மகன்கள் உட்பட அனைவரும் உடனிருந்தனர். அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பிரேமலதாவின் சகோதரி சண்முகபாண்டியனை காட்டி என்னிடம், ‘தம்பி ஹீரோவாக நடிக்கிறான். நீங்கள் எல்லாரும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என என்னிடம் சொன்னார். அந்த வார்த்தையை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆனது. விஜயகாந்த் சார் எத்தனையோ நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார். எத்தனையோ தர்ம காரியங்களைச் செய்துள்ளார். ஆனால் அம்மா நீங்க எல்லாரும் தான் பார்த்துக்கணும் என கூறியது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அந்தப் பசங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. விஜயகாந்த் நிறைய ஹீரோக்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சண்டை மற்றும் பாடல்களில் நடித்துள்ளார். மற்றவர்களை வளர்த்து விடுவதில் அவருக்கு மிகுந்த சந்தோசம் இருந்தது. அதேபோல நானும் அவரின் கண்ணுப்படப்போகுதய்யா படத்தில் இடம்பெற்ற மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நடனம் அமைத்திருந்தேன்.

அப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. சண்முகபாண்டியன் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டும். அதை பிரபலப்படுத்த வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யலாம் என்று இருக்கிறேன். அதுமட்டுமின்றி, படக்குழு ஒப்புக்கொண்டால், அந்த படத்தில் நானும் கேமியோ ரோலில், சண்டை காட்சியோ அல்லது பாடலோ எதுவாக இருந்தாலும் நடிக்கலாம் என்றும் இருக்கிறேன். சண்முகபாண்டியனும் நானும் சேர்ந்து நடிக்கிற மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்தாலும் அவருடன் இணைந்து (Raghava Lawrence Talk About Vijayakanth Son) நடிக்கிறேன். அரசியலில் களமிறங்கும் விஜயபிரபாகரனுக்கு எனது வாழ்த்துகள் என்று லாரன்ஸ் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply