Raghu Thatha Trailer : ரகு தாத்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லர் (Raghu Thatha Trailer) வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் :

படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஒருபுறம் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி மறுபுறம் பல புதுமுக இயக்குனர்களின் கதைகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபாஸ் நடித்த கல்கி படத்தில் புஜ்ஜி என்ற எந்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். தற்போது ரகு தாத்தா, கன்னிவெடி, பேபி ஜான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர். அந்தவகையில் காமெடி படமாக உருவாகி வரும் படம் ரகு தாத்தா ஆகும். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரகு தாத்தா :

அறிமுக இயக்குனர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரவிந்திர விஜய், தேவதர்ஷினி, ஆனந்த் சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Raghu Thatha Trailer :

ஒரு பொண்ணு மாதிரி எல்லாம் பண்ண முடியாது என்று தொடங்கும் ட்ரெய்லர் நம் கவனத்தை ஈர்க்கிறது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அடக்குமுறை செய்யும் சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள துடிக்கும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ். பெண் என்பதால் சமூகம் எழுப்பும் கேள்விகளை தைரியமாக எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்திருப்பதை இந்த ட்ரெய்லரில் (Raghu Thatha Trailer) காணலாம். ஆனால் அவர் தனது லட்சியத்தை அடைய ஒரு சிக்கலை எதிர்கொள்கிறார்.

கீர்த்தி சுரேஷ் எதிர்கொள்ளும் சவாலே ரகு தாத்தா படத்தின் கதை ஆகும். படத்தில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், ரவிந்திர விஜய், தேவதர்ஷினி மற்றும் ஆனந்த் சாமி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. கன்னடத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஹாம்பேல் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது, படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, இந்நிறுவனம் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற பிரமாண்டமான படங்களை தயாரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply