Ragi Flour Benefits : கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்

Ragi Flour Benefits : கேழ்வரகு எனப்படும் ராகியை தினமும் சாப்பிடலாமா? யார் யார் சாப்பிடலாம் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். ராகியை சர்க்கரை நோயாளிகள் முதல் இதய நோய் உள்ளவர்கள் வரை அனைவரும் உட்கொள்ளலாம். இதனை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

நமது பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், உளுந்து, கம்பு, கோதுமை, தினை, உளுந்து, குதிரைவாலி போன்றவற்றை நாகரீகமற்ற உணவுகள் என்று தூக்கி எறிந்துவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா எனச் சாப்பிடும் போது சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாய ஆரம்பித்தது. எந்த மருந்துகளை உட்கொண்டாலும், உணவுமுறைதான் நிரந்தரத் தீர்வைத் தரும் என்பதை உணர்ந்து, இப்போது நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புகிறோம். திரும்பிப் பார்க்கும்போது நமது வயல்களில் சிறுதானியங்கள் விதைக்கப்படவில்லை.

நாம் சிறுதானியங்கள் பயிரிட்டிருந்த பல நிலங்கள் இன்று கட்டிடங்களாக மாறிவிட்டன. நம் வீடுகளில் சமைக்கப்படும் தானியங்கள் இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு வாங்குக்கிறோம். கோதுமை மற்றும் அரிசி ஆகியவை உலகின் பெரும்பான்மையான மக்கள் உட்கொள்ளும் முக்கிய உணவுகள். இதற்கு மாற்றாக அதிக ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடிய தானியங்கள் உள்ளன. அந்த சிறுதானிய வகையில் கேழ்வரகும் உள்ளது. தற்போது கேழ்வரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

கேழ்வரகின் நன்மைகள் :

Ragi Flour Benefits - உடல் எடை குறைய :

  • இடுப்பை சுற்றிலும் சதை அதிகமாகி, உடல் எடை அதிகரித்து, அசிங்கமாகத் தெரிகிறதா? ஒருவேளை நீங்கள் கட்டாயம் ஒருவேளை உணவாக ராகி களியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அரிதான டிரைப்ஃடோபன் என்னும் ஆன்டி – ஆக்ஸிடன்ட்  நிறைந்துள்ளது.
  • இது வயிறு முழுமையின் உணர்வைத் தருகிறது மற்றும் அதிகப்படியான பசியைக் குறைக்கிறது. ராகியில் அதிகளவு புரதம், நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

Ragi Flour Benefits - நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க :

  • வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராகி களியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு மற்றும் அஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கலாம்.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம், சர்க்கரை நோயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
  • ராகியில் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. அதோடு இதிலுள்ள அதிகப்படியான உயர் நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனைல்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க செய்யும்.

Ragi Flour Benefits - உடலை ரிலாக்ஸாக வைக்க :

  • உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது. எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பயம் உள்ளவர்கள் ராகியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அது உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது. ராகியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலை நேர்மறை ஆற்றலுடன் வைத்திருக்க மிகவும் உதவுகிறது.

Ragi Flour Benefits - உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க :

  • ராகியில் கால்சியம் நிறைந்துள்ளது, இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்ல வலிமையை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைக்கிறது. கோடையில் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கோடை காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் சூடு குறையும். வெயில் காலத்தில் அதிக உடல் வெப்பத்தால் ஏற்படும் சரும பிரச்சனைகள் மற்றும் உடல் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

Ragi Flour Benefits - தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க :

  • புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் உணவில் ராகியை தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். ராகியில் நிறைந்துள்ள சத்துக்கள் பால் சுரப்பை அதிகரிக்கும். அதனால் பாலில் கால்சியம், அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ராகியை தாய்மார்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

Ragi Flour Benefits - இளமையாக இருக்க :

  • ராகிக்கு சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை குறைக்கும் திறன் உள்ளது. ராகியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தின் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். ராகியை தொடர்ந்து உட்கொள்வது வயதானதைத் தடுக்கிறது மற்றும் இளமையாக இருக்க உதவுகிறது. களி போல ராகியையும் தோசை, ரொட்டி, பணியாரம் என பல வகைகளில் சாப்பிடலாம். மற்ற அனைத்து வகைகளிலும் சிறிது எண்ணெய் சேர்க்கப்படுகிறது. ஆனால் ராகி கேலில் எண்ணெய் சேர்க்கப்படுவதில்லை. எனவே இளமையாக இருக்க ராகியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

Ragi Flour Benefits - எலும்புகள் உறுதியாக :

  • ராகியில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இந்த ராகி களியை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் எலும்புகளை வலிமையாக்குகிறது.

Ragi Flour Benefits - கொலஸ்டிராலை கட்டுப்படுத்த :

  • கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. இதயச் சுவர்கள் மற்றும் கல்லீரலில் கொலஸ்டிரால் படிந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அத்தகைய கொலஸ்டிராலை குறைக்க இந்த ராகியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Ragi Flour Benefits - ரத்தசோகையை கட்டுப்படுத்த :

  • சிறிய வேலைகளில் கூட சோர்வடைகிறீர்களா? அப்போது கண்டிப்பாக உங்களுக்கு அனீமியா என்னும் ரத்தசோகை இருக்க வாய்ப்பு உள்ளது. ராகியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் இரத்த சோகை பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இது இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

Ragi Flour Benefits - இதய ஆரோக்கியத்திற்கு :

  • கேழ்வரகு மெக்னீசியம் நிறைந்தது. 100 கிராம் கேழ்வரகில் 137 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியம் நரம்பு செயல்பாடு மற்றும் சாதாரண இதய துடிப்பை பராமரிக்க உதவுகிறது. இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் உணவில் கேழ்வரகை சேர்த்துக்கொள்ளுங்கள்.

Latest Slideshows

Leave a Reply