Rahul's Batting : கே.எல் ராகுல் சிறப்பான பேட்டிங்

Rahul's Batting :

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியை ஆல்-அவுட் செய்ய தென்னாப்பிரிக்க அணி திட்டமிட்டது. விராட் கோலியின் விக்கெட் வீழ்ச்சியால் இந்திய அணி சரியும் என நினைத்ததை கே.எல்.ராகுல் (Rahul’s Batting) முறியடித்தார். ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி பெரும் சரிவில் இருந்து மீண்டு முதல் இன்னிங்சில் 200 ரன்களை கடந்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் 59 ஓவர்களுடன் முடிவடைந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி பெரும் ஏமாற்றம் அடைந்தது. 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்த தென்னாப்பிரிக்க அணி வாய்ப்பை வீணடித்தது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 5 ரன்களும், ஜெய்ஸ்வால் 17 ரன்களும் மட்டுமே எடுத்தனர். அடுத்து வந்த கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களும், விராட் கோலி 38 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 31 ஓவர்களில் 107 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து, கே.எல்.ராகுல் மட்டும் முக்கிய பேட்ஸ்மேனாக (Rahul’s Batting) களமிறங்கினார். பின்வரிசை வீரர்கள் அஷ்வின், பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் இணைந்து ராகுல் ரன்களை குவித்தார். கோலி அவுட்டாக, இந்திய அணியை எப்படியும் 200 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய திட்டமிட்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு ராகுல் (Rahul’s Batting) ஏமாற்றம் அளித்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கே.எல்.ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் நாள் ஆட்டம் மழையால் 59 ஓவர்களில் முடிந்தது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா 5 விக்கெட்டுகளையும், பர்கர் 2 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாவது நாளில் இந்திய அணி 250 ரன்கள் சேர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply