Railway Recruitment : இரயில்வேதுறையில் வேலைவாய்ப்பு ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Railway Recruitment : மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு ரயில்வே பணிமனைகளில் 3115 அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பபித்துகொள்ளலாம்.

Railway Recruitment - பதவி (Posting) :

  • பதவி (Posting) :  கொல்கத்தாவில் உள்ள கிழக்கு இரயில்வேயில் Trade Apprentice பதவி.
  • மொத்த காலியிடங்கள் (Total Vacancy) : Trade Apprentice பணியிடங்களுக்கு மட்டும் 3115 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • வயது  (Age) : 28.10.2023 தேதியின்படி 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

Railway Recruitment - பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் :

  • Electrician/Fitter/Painter/Welder (Gas & Electric)/ COPA/ Diesel Mechanic/Machinist/Electronic Mechanic/Motor Mechanic/Wirman/ Tool Maintenance Assistant/Blacksmith/Mason/Lineman

Railway Recruitment - விண்ணப்பிக்க கட்டணம் (Fees) :

  • விண்ணப்பிக்க கட்டணம் (Fees) : பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.100/- எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்தவேண்டும்.
  • தேர்வு செய்யும் முறை (Eligibility) : ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்ககளின் அடிப்படையில் தகுதியானவர்கள் Trade Apprentice பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.வெல்டர் டிரேடுக்கு 15 மாதங்களும், இதர டிரேடு பிரிவுகளுக்கு ஒரு வருடமும் பயிற்சி வழங்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் முறை (Application Process) : கிழக்கு இரயில்வேயில் Trade Apprentice பணியிடங்களுக்கு www.apprentichehipindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஐடிஐ தகுதியை பதிவு செய்து விட்டு பிறகு www.rrcrecruit.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் (Last Date) : 28.10.2023 அன்று மாலை 6 மணி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply