Railway Sports Quota Recruitment 2024 : இரயில்வேயில் 67 விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தெற்கு இரயில்வேயில் காலியாக இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்கள் (Railway Sports Quota Recruitment 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வி தகுதிகளுடன் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Railway Sports Quota Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : தெற்கு இரயில்வேயில் ஹாக்கி, வாலிபால், பேஸ்கட் பால், கால்பந்து, தடகளம், செஸ், கிரிக்கெட், பளு தூக்குதல், பாடி பில்டிங், பாக்சிங், நீச்சல், டேபிள் டென்னிஸ், வாட்டர் போலோ உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : தெற்கு இரயில்வேயில் இந்த Sports Person பணியிடங்களுக்கு லெவல்-1 விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்து இருக்க வேண்டும். மேலும் லெவல் 2/3 விளையாட்டு பிரிவுக்கு  விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். லெவல் 4/5 விளையாட்டு பிரிவுக்கு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த Sports Person பணியிடங்களுக்கு (Railway Sports Quota Recruitment 2024) 01.04.2022-க்கு பிறகு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த Sports Person பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், SC/ST பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  4. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : தெற்கு இரயில்வேயில் இந்த Sports Person பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://iroams.com/rrc_sr_sports2024/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

  5. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : தெற்கு இரயில்வேயில் இந்த Sports Person பணியிடங்களுக்கு வரும் 06.10.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply