Raisin Water Benefits : உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். அந்த பழக்கத்தை கைவிட்டு, இனி காலையில் எழுந்தவுடன் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்த தண்ணீரை குடியுங்கள். தினமும் காலையில் இந்த தண்ணீரை குடிப்பதால் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும். திராட்சையில் இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து கழிவுகளை அகற்றுவதில் தொடங்கி பல நன்மைகளைக் கொண்டுள்ளன. திராட்சையில் குறிப்பாக நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக உலர் திராட்சையை ஊறவைத்த நீரில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் உடல் வறண்டு போவதைத் தடுத்து, உடலை குளிர்ச்சியாகவும், எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. அந்தவகையில் உலர் திராட்சையை தினம் தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை (Raisin Water Benefits) தற்போது காணலாம்.

Raisin Water Benefits - உலர் திராட்சை நீரின் நன்மைகள் :

ஆற்றல் மேம்பட :

நாம் அனைவரும் கோடைகாலத்தில் சந்திக்கக்கூடிய பல பிரச்சனைகளுக்கு உலர் திராட்சை தண்ணீர் பெரிதும் (Raisin Water Benefits) உதவுகிறது. உலர் திராட்சையில் இயற்கையாகவே சர்க்கரை வளமான அளவில் இருக்கிறது. உட்கொண்டால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மேலும் உலர் திராட்சையில் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவு. நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது எனவே கோடையில் உலர் திராட்சை ஊற வைத்த நீரைக் குடிப்பது நல்லது.

குடலியக்கம் சீராகும் :

உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீரில் மலமிளக்கும் பண்புகள் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடியாக தீர்வு அளிக்கிறது. ஒருவரின் செரிமான மண்டலம் சீராக இருந்தாலே, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு உலர் திராட்சை ஊற வைத்த நீர் பெரிதும் உதவி புரியும்.

உடல் குளிர்ச்சியாக இருக்க :

முக்கியமாக உலர் திராட்சை ஊற வைத்த நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எனவே உடல் சூடு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இந்த நீரை குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலனைப் பெறலாம்.

உடல் எடையை குறைக்க :

திராட்சை உங்கள் உணவை சீரானதாக்குகிறது மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதில் இயற்கை இனிப்புகள் (குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ்) இருப்பதால், இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

முடி உதிர்வை தடுக்க :

முடி உதிர்வு என்பது இன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த உலர் திராட்சை தண்ணீர் இதற்கு சிறந்த மருந்தாகும். இது மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை துரிதப்படுத்த உதவுகிறது. இது முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

சருமப் பொலிவிற்கு :

உலர் திராட்சை அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொண்ட ஓர் பொருளாகும். இது நுண்ணூட்டச் சத்துக்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். சதை ஒட்டிய கன்னங்களுடன் வருபவர்கள் தினமும் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கன்னங்கள் உப்பி நல்ல பொலிவுடன் இருக்கும். இதிலுள்ள ஆக்சிடண்ட்டுகள் சரும செல்களில் ஏற்படும் சேதங்களைச் சரிசெய்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை (Raisin Water Benefits) கொண்ட உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை குடித்து பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply