Raisins Benifits in Tamil - உலர் திராட்சை பயன்கள் மற்றும் தீமைகள்

கிஸ்மிஷ் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையின் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள். அதிக அளவு  ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள உலர்ந்த திராட்சைகளை நாம் பாயாசத்திற்கும் கேசரிக்கும் மட்டும்தான் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் என 3 நிறங்களில் கிடைக்கும் உலர் திராட்சையை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால் பல நன்மைகளை பெறலாம்.

உலர் திராட்சையை பச்சையாக சாப்பிடுவதை விட, அவற்றை இரவு முழுதும் ஊறவைத்து சாப்பிடுவதுதான் மிகவும் ஆரோக்கியமான வழியாகும். இது பலவிதமான   பிரச்சனைகளைத் தடுக்கும்.

உலர்திராட்சையை தண்ணீரில் ஊறவைத்தால் தேவையற்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்து விடும்.  இதனால் உடலில் விரைவாக உறிஞ்சப்படுவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மட்டுமே உலர்திராட்சையில் இருக்கும்.  இரவில் ஊறவைத்த திராட்சை ஆனது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும்.  இரவில் ஊறவைத்து சாப்பிடுவது வயிற்றில் அமில அளவை சமன் செய்யும்.

உலர் திராட்சை ஊட்டச்சத்துக்கள்

Raisins Benifits in Tamil: உலர்  திராட்சையில் வைட்டமின் B, வைட்டமின் C, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோ நியூட்ரின்கள், பாலிபினால்கள் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நமது  நல் வாழ்விற்கும் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உதவுகின்றன.

உலர்திராட்சை நன்மைகள் (Raisins Benifits) மற்றும் தீமைகள்

Raisins Benifits - Platform Tamil

இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது

  • உலர்திராட்சை ஆனது மலச்சிக்கல், வயிற்று வலி, குடலில் எரிச்சல், வீக்கம், வாய்வு போன்ற இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
  • உலர்திராட்சையில் உள்ள நார்ச்சத்து  ஆனது  பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள், 15 – 20 உலர் திராட்சைகளை ஒரு கப் நீரில் போட்டு நல்ல கொதிக்க விட்டு இறக்கி, அதை  நன்றாக மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால், விரைவில் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.
  • மேலும் உலர்திராட்சையில் உள்ள நார்ச்சத்து உடலில் இரத்த நாளங்களில் ஏற்படும் விறைப்பை குறைக்கிறது,  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, உயர் ரத்த அழுத்தத்திற்கான அபாயத்தை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
  • உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் உடலின் செரிமான பகுதிதான் உற்பத்தி செய்கின்றன.  எனவே செரிமான பகுதி மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் நாம் செரிமான பாதையை சரியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு உலர் திராட்சை நமக்கு உதவி செய்கிறது. 
  • இயற்கையாகவே உலர் திராட்சை செரிமான சக்தி கொண்டு காணப்படுவதால்,  குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து சீராக மலம் வெளியாக உதவி புரிகிறது.

வறட்டு இருமலை அடக்கி, தொண்டையில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கிறது

  • ஆயுர்வேதத்தின்படி உலர்திராட்சை ஆனது எண்ணெய் தன்மை கொண்ட ஸ்நிக்த குணம் கொண்டது என்று நம்பப்படுகிறது, அதனால் அது வறட்டு இருமலை அடக்கி தொண்டையை ஆற்றி வறட்சியை குறைக்கிறது.

உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது

  • இரத்த சோகை உள்ளவர்கள்,  உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில்  நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, உடலில் உள்ள இரத்தணுக்களின் அளவு   அதிகரிக்கும்.  
  • இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இது ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.
  • இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இரும்புச்சத்து நிறைந்த திராட்சை, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகையை போக்கவும் உதவுகிறது.

கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது

  • கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லாததால், அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில்  தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

நோய் தொற்றுகள் உடலில் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது

  • உலர்திராட்சைகளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் உலர்திராட்சை பல்வேறு நோய் தொற்றுகள் உடலில் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
  • சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், இரவில் ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அதனை உட்கொண்டு  வந்தால், விரைவில் நோய்த்தொற்றில்  இருந்து விடுபடலாம். ஆயுர்வேதம் நோய்த்தொற்றை  குணமாக்க இது  சிறந்த வழி என்று பரிந்துரைக்கிறது.  

பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

  • இது வாயில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதால், வாய் துர்நாற்றத்தை போக்க மற்றும் உடலின் செரிமான அமைப்பை பாதுகாக்க உதவுகிறது.
  • பற்கள், ஈறுகளில் நல்ல ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் பல் ஈறுகளின் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

உடல் வெப்பம் தணிக்க உதவுகிறது

  • உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், 20-25  உலர் திராட்சையை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த உலர் திராட்சையை உட்கொண்டு அந்த நீரைக் குடித்துவந்தால், விரைவில் உடல் வெப்பம்  தணியும்.

உடல் எடை குறைக்க மற்றும் அதிகரிக்க உதவும் திராட்சை

  • உடல் எடை இழப்புக்கு உலர் திராட்சைகள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இவற்றில் அதிகமான கலோரிகள் காணப்படுவதால், சரியான முறையில் மற்றும் சரியான அளவில் இந்த உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் நல்ல உடல் எடை இழப்பு பலன்  கிடைக்கும்.  இவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
  • உலர் திராட்சை நீர் உடல் எடையை குறைக்கவும், அதே நேரத்தில் உடல் எடையை அதிகரிக்கவும் சிறந்த நண்பனாக இருக்கும். உடல் எடையை அதிகரிக்கத் தேவையான இயற்கையான சர்க்கரைகளான பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிகமாக நிறைந்துள்ள உலர் திராட்சைகள் அதிக ஆற்றலை கொடுக்கும் மற்றும் உடலில் உள்ள மோசமான கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடை அதிகரிக்கவும் உதவி செய்யும்.   இரண்டு கப் தண்ணீரில் 150 கிராம் திராட்சையை கொதிக்க வைத்து, ஆற வைத்து பருகி வர உடல் எடை அதிகரிக்கும்.
  • பெண்கள் ஒரு சிறிய கப் (15-20 கிஸ்மிஷ்) உலர் திராட்சையையும் அதே நேரத்தில் ஆண்கள் ஒரு நாளைக்கு 1.5 கப் உலர் திராட்சையையும்  உட்கொள்ளலாம்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

  • உலர்திராட்சையில் உள்ள கேடசின்கள் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களான பாலிபினாலை நல்ல உற்பத்தி செய்கின்றன. நுரையீரல் புற்றுநோய்க்கு  தீர்வாக மற்றும் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியக்கூகூறுகளை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
  • உலர்திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களில் ஒன்றான ரெஸ்வெராட்ரோல் தோல் புற்றுநோயைத் தடுக்கிறது.  உலர்திராட்சையில் உள்ள மற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதம், சுருக்கங்கள்  போன்றவற்றிலிருந்து உடல் சருமத்தைப் பாதுகாக்கின்றது.

அமிலத்தன்மையை கட்டுப்படுத்துகிறது

  • அமிலத்தன்மையை குணப்படுத்துவதில் திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செரிமானத்தை மேம்படுத்தி  ஒருவரை அசிடிட்டியில் இருந்து விடுவிக்கிறது.  இரவில் ஊறவைத்த  திராட்சை வயிற்றில் அமில அளவை சமன் செய்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தை எளிதாக்குகிறது

  • நமது ​​​இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க மன அழுத்தமும் உணவு பழக்கமுமே நம் இரத்த அழுத்தத்தின் ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.திராட்சையில்  உள்ள அதிக பொட்டாசியம் நமது ரத்த நாளங்களில் தளர்வை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உதவி புரிகிறது.

அழற்சி பிரச்சனைகளுக்கு உதவுகிறது

  • வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்சி ஆக்ஸிடன்ட்கள் அழற்சியால் ஏற்படும் கீல்வாதம் மற்றும் அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றை நீக்குகிறது.

தலைவலியில் இருந்து விடுவித்து, வெர்டிகோவை தளர்த்துகிறது.

  • நரம்பியக்கடத்திக் கோளாறான வெர்டிகோ தலைச்சுற்றலின் ஒரு வடிவமே ஆகும். வெர்டிகோவிலிருந்து நிவாரணம் பெற திராட்சை உதவும். வெர்டிகோ நோயாளிகள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உலர் திராட்சையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து  உதவுகிறது.
  • அசிடிட்டி மற்றும் சோர்வு காரணமாக ஏற்படும் தலைவலிக்கும் இது ஒரு அற்புத மருந்து. மேலும் உலர் திராட்சையில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும். மற்றொரு காரணம், பொட்டாசியம் குறைந்த அளவு உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தூண்டும்.

பார்வை சக்தியை அதிகரிக்கிறது

  • வைட்டமின் C மற்றும் பாலிபினோ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், லிக் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ள உலர்  திராட்சை  கண் ஆரோக்கியத்திற்கு நல்ல ஊக்கத்தை அளிக்கிறது மற்றும்  கண்களுக்கு ஊட்டமளிக்கிறது, இரவு குருட்டுத்தன்மை, கண்புரை மற்றும் பார்வை பிரச்சினைகளையும் குணப்படுத்துகிறது.
  • கண்களுக்காக உலர்  திராட்சை சாப்பிடுவதற்கான சரியான வழி, அவற்றை தண்ணீரில் அல்லது ஒரு கப் பாலில் ஊறவைத்து சாப்பிடுவது ஆகும்.

Latest Slideshows

Leave a Reply