Rajasthan Royals Beat CSK By 6 Runs : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

18-வது ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை (Rajasthan Royals Beat CSK By 6 Runs) சந்தித்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்தாலும் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் அதிரடியான விளையாடினர்.

நிதிஷ் ராணா அரைசதம்

பவர்பிளேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 82 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 36 பந்தில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நிஷிஷ் ராணா 81 ரன்கள் அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் ராஜஸ்தான் அணி (Rajasthan Royals Beat CSK By 6 Runs) அடிக்கும் என்ற நிலையில்  இருந்தபோது, சென்னை அணியின் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார். நிதிஷ் ராணாவை 81 ரன்னில் அஸ்வினும், கேப்டன் பராக்கை 37 ரன்னில் பத்திரனாவும் வெளியேற்ற 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Rajasthan Royals Beat CSK By 6 Runs - Platform Tamil

சென்னை அணிக்கு 183 ரன்கள் இலக்கு

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ரச்சின் ரவிந்திரா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டை இழந்த சென்னை அணி பவர்பிளேவில் அடுத்த விக்கெட்டை இழக்க கூடாது என (Rajasthan Royals Beat CSK By 6 Runs) பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. பவர்பிளே முடிவில் 11 ரன்கள் என நெட் ரன்ரேட் மாற சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் அதிகமானது. மேலும் ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் ஷங்கர் என அனைவரும் அடுத்தடுத்து வெளியேற சிஎஸ்கே அணி தடுமாறியது. முறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ் 64 ரன்களுடன் வெளியேறி ராஜஸ்தானின் வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தினார்.

6 ரன்னில் சென்னை அணி தோல்வி (Rajasthan Royals Beat CSK By 6 Runs)

கடைசி 2 ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 39 ரன்கள் தேவை என போட்டி மாற 19-வது ஓவரில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் சேர்ந்து 19 ரன்கள் அடித்து மீண்டும் நம்பிக்கை கொடுத்தனர். 20-வது ஓவரின் முதல் பந்தில் தோனியை ஒரு அபாரமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் (Rajasthan Royals Beat CSK By 6 Runs) ஹெட்மயர். பிறகு வெற்றிக்காக போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம்  2021-ம் ஆண்டுக்கு பின் 175 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருமுறை கூட சேஸிங் செய்ததில்லை என்ற மோசமான சாதனை தொடர்ந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply