Rajasthan Team Coach Changed: சங்ககாரா நீக்கம்,ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு...

தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா :

கடந்த சில வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா முக்கிய காரணம் ஆவார். ஆனால் கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இதனால் கடுப்பான நிர்வாகம் அணியின் பயிற்சியாளரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் இருந்தது. லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன்ட்டி பிளவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தது. தற்போது சங்ககாரா அவர்கள் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் ஆன ராஜஸ்தானின் அணி அதன் பிறகு ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. அது மட்டும் அல்லாமல் ராஜஸ்தான் அணியின் ரசிகர்கள் பட்டாளமும் குறைந்து கொண்டே வந்தது. இதற்கிடையில் தான் அணியின் நிர்வாகம் தலைமை பயிற்சியாளராக குமார் சங்ககாராவையும் கேப்டனாக சஞ்சீவ் சாம்சனையும் அதிரடியாக நியமித்தது. இந்த முடிவிற்கு உடனடியாக பலன் கிடைத்தது. ராஜஸ்தான் அணி கடந்த நான்கு வருடங்களில் மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. இதனால் திடீரென ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது. ஆனால் கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவு விளையாட முடியவில்லை.

முக்கிய மாற்றம் :

தற்போது ராஜஸ்தான் அணி முக்கிய அணியாக உருவெடுத்துள்ளது. இதனால் திடீரென அடுத்து ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிகிறது. லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. அவர் மற்ற லீக் தொடரிலும் சிறப்பாக பணியாற்றுவதாக தெரிகிறது. இதனால் அவரை ஒப்பந்தம் செய்ய அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது.

இதன் காரணமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த சங்ககாரா நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திடம் கேட்டபோது சங்கக்காரா அவர்கள் பதவி உயர்வு பெற்று அணி இயக்குனராக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply