Rajasthan Team Started IPL Training : ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியை தொடங்கியது ராஜஸ்தான் அணி

ஜெய்ப்பூர் :

ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சி முகாமில் (Rajasthan Team Started IPL Training) ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. அதன்பிறகு, 14 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த ராஜஸ்தான் அணி, கடந்த 2 சீசன்களாக அனைத்து அணிகளுக்கும் பீதியைக் கொடுத்து வருகிறது.

ராஜஸ்தான் அணியால் தொடங்கப்பட்ட கிரிக்கெட் அகாடமிகளும், இளம் வீரர்களுக்கு அளிக்கப்படும் தொடர் பயிற்சியும் இதற்குக் காரணம். இந்த காரணத்திற்காக, ராஜஸ்தான் அணி நிர்வாகம் சிறப்பு உட்புற விளையாட்டு அரங்கங்கள் மற்றும் மைதானங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மார்ச் 22ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமை ராஜஸ்தான் அணி நிர்வாகம் (Rajasthan Team Started IPL Training) தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்கள் பலர் பங்கேற்கும் இந்த பயிற்சி முகாமில், நேற்று அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். சஞ்சு சாம்சன் பிரமாண்டமாக போடப்பட்ட கட் அவுட்டுக்கு முன்னால் நின்று சஞ்சு சாம்சன் ஆடிய காட்சிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே சாஹல், பட்லர் உள்ளிட்டோர் பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

Rajasthan Team Started IPL Training :

அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துருவ் ஜூரல், யாஷ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதேபோல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ரியான் பராக் சிறப்பான பார்மில் உள்ளதால், அவரும் பயிற்சியில் சேர்ந்துள்ளார். பல நட்சத்திர வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணி இந்த முறை பல அணிகளை ஆச்சரியப்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி முதல் அணியாக பயிற்சி முகாமை தொடங்கிய நிலையில், ராஜஸ்தான் அணி மார்ச் 1ம் தேதி முதல் பயிற்சியில் (Rajasthan Team Started IPL Training) ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply