Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்

சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக (Rajini-Kamal To Act Together After 42 Yrs) நடிகர் சங்கம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் இன்னும் கிளாசிக் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ், இந்தியில் 16 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் கடைசியாக கே.பாலசந்தர் இயக்கிய அக்னி சாட்சி படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இருவரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக இருப்பதால், இருவரையும் ஒன்றாக திரையில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளதாக (Rajini-Kamal To Act Together After 42 Yrs) நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க பொதுக்குழு :

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடிகர் நாசர் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் வந்து கலந்து கொண்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிகழ்ச்சியில் பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹேமா கமிட்டி மற்றும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, நடிகர் சங்கத்திற்கு நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தது குறித்து பேசினார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக வங்கியில் வாங்கிய கடனை அடைக்க சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கார்த்திக் தெரிவித்தார்.

Rajini-Kamal To Act Together After 42 Yrs :

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு மேடை நாடகம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இந்த நாடகத்தில் நடிகர் ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலை கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். இது ரஜினி சார் கொடுத்த ஐடியா தான். நாங்க எல்லாரும் ஒன்று சேர்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதற்காக நாங்களே ரொம்ப ஆவலா இருக்கோம். தற்போது கமல் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் திரும்பியவுடன் இதற்கான வேலைகள் தொடங்கப்படும் என்று கார்த்தி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply